2024 மக்களவை தேர்தலிலும் திமுக-காங். கூட்டணி தொடரும்... மல்லிகார்ஜுனே கார்கே திட்டவட்டம்!!

By Narendran S  |  First Published Mar 1, 2023, 7:35 PM IST

2024 மக்களவை தேர்தலிலும் திமுக-காங்கிரஸ் கூட்டணி தொடரும் என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார்.


2024 மக்களவை தேர்தலிலும் திமுக-காங்கிரஸ் கூட்டணி தொடரும் என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார். சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் காஷ்மீர் முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லா, உ.பி. முன்னாள் முதல்வர் அகிலேஷ் யாதவ், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, பீகார் துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ் உள்ளிட்ட தேசிய தலைவர்கள் பலர் கலந்துக்கொண்டுள்ளனர். இதில் பங்கேற்று பேசிய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, பெரியார், அண்ணா, கலைஞர் வழியில் நடப்பவராக முதல்வர் மு.க.ஸ்டாலின் விளங்குகிறார். நீண்ட ஆயுளுடனும், நல்ல உடல் நலத்துடனும் மக்களுக்கு சேவையாற்ற வேண்டும்.

இதையும் படிங்க: பொதுமக்கள் பாவம்.. திமுக தேர்தல் வாக்குறுதியை இப்போதாவது நிறைவேற்றுமா.? டிடிவி தினகரன் கேள்வி

Latest Videos

எப்பொழுதுமே தமிழ்நாடு முற்போக்கு சமுதாயமாக இருந்து வந்துள்ளது. ராஜாஜி, காமராஜர், பெரியார், அண்ணா, கலைஞர் ஆகியோர் தமிழ்நாட்டுக்கு ஆற்றிய சேவையை மறக்க முடியாது. தமிழ்நாடு எப்போது முன்னோடியான மாநிலம், சிறந்த தலைவர்கள், அதிகாரிகள், எழுத்தாளர்களை உருவாக்கிய மாநிலம். தமிழ்நாடு தான் கட்டாய கல்வியை முதலில் கொண்டு வந்தது. சமூகநீதியை காப்பதில் காங்கிரசும் திமுகவும் இணைந்து செயல்படும். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்த இந்திய ஒற்றுமை பயணம் மாபெரும் வெற்றி பெற்றது. ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை பயணத்தை காஷ்மீரில் ஃபரூக் அப்துல்லா முடித்து வைத்தார்.

இதையும் படிங்க: சேபாக்கம் தொகுதியில் இன்று பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரம் அணிவித்த உதயநிதி

எதிர்க்கட்சிகள் ஆளும் அனைத்து மாநிலங்களிலும் ஆளுநர்களின் அத்துமீறல் தொடர்கிறது. பிரிவினை சக்திகளுக்கு எதிரான போராட்டத்தில் அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒன்றிணைய வேண்டும். நீதித்துறையை எப்படியாவது தங்களின் கைக்குள் கொண்டுவர வேண்டும் என்று பாஜக துடிக்கிறது. அரசியல் சட்டத்தை பாதுகாக்கும் போராட்டத்துக்கு ஸ்டாலின் தலைமை தாங்குவார். 2024 மக்களவை தேர்தலிலும் திமுக - காங்கிரஸ் கூட்டணி தொடரும். திமுக-காங்கிரஸ் கூட்டணி மிகப்பெரிய வெற்றி பெறும். பாஜக அரசின் கொள்கைகளால் 23 கோடி பேர் வறுமைக் கோட்டுக்கு கீழ் தள்ளப்பட்டுள்ளனர். பாஜக ஆட்சியில் இளைஞர்கள் வேலை கிடைக்காமல் தவித்துக் கொண்டிருக்கின்றனர் என்று தெரிவித்துள்ளார். 

click me!