TTV Dhinakaran: பொதுமக்கள் பாவம்.. திமுக தேர்தல் வாக்குறுதியை இப்போதாவது நிறைவேற்றுமா.? டிடிவி தினகரன் கேள்வி

Published : Mar 01, 2023, 06:44 PM IST
 TTV Dhinakaran: பொதுமக்கள் பாவம்.. திமுக தேர்தல் வாக்குறுதியை இப்போதாவது நிறைவேற்றுமா.? டிடிவி தினகரன் கேள்வி

சுருக்கம்

தி.மு.க தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி அளித்தபடி சிலிண்டருக்கு ரூ.100 மானியம் வழங்குவார்களா ? என்று கேள்வி எழுப்பியுள்ளார் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன்.

ஒவ்வொரு மாதத்தின் தொடக்கத்திலும் எண்ணெய் நிறுவனங்கள் எரிபொருட்களின் விலையை நிர்ணயம் செய்கின்றது.

மார்ச் மாதம் முதல் நாளான இன்று சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை உயர்த்தப்பட்டுள்ளது. விலை உயர்வின்படி, ரூ. 1068 ஆக இருந்த சமையல் சிலிண்டர் விலை தற்போது ரூ. 1,118.50 க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும், வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை ரூ. 223 அதிகரித்துள்ளது.

இதன் மூலம் கடைகளில் பயன்படுத்தப்படும் வணிக சிலிண்டர் ரூ. 2,268க்கு விற்பனை செய்யப்படுகிறது. சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை உயர்வு பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. பல்வேறு கட்சி தலைவர்களும் விலை உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். இந்த நிலையில் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை உயர்வுக்கு கண்டனம் தெரிவித்து உள்ளார்.

இதையும் படிங்க..Bank Holiday : மார்ச் மாதத்தில் வங்கி விடுமுறை எத்தனை நாட்கள் தெரியுமா.? முழு விபரம் உள்ளே !!

இதுகுறித்து டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், மக்களை நேரடியாக பாதிக்கும் வகையில் வீட்டு உபயோகம் மற்றும் வணிக பயன்பாட்டுக்கான சமையல் எரிவாயு சிலிண்டரின் விலையை மத்திய அரசு மேலும் உயர்த்தியிருப்பது கண்டனத்திற்குரியது.  ஏற்கனவே, விலைவாசி உயர்வால் பாதிக்கப்பட்டிருக்கும் மக்களுக்கு இந்த விலை உயர்வு பெரும் சுமையாக இருக்கும்.

இதையும் படிங்க..Erode East By-Election: ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்.. வெல்லப்போவது எந்த கட்சி.? வெளியானது பரபர சர்வே முடிவுகள்

தமிழ்நாட்டைப் பொறுத்தமட்டில் சொத்துவரி உயர்வு, மின் கட்டண உயர்வு ஆகியவற்றால் மக்கள்  பாதிக்கப்பட்டிருக்கும் நிலையில், சமையல் எரிவாயு விலை உயர்விலிருந்து அவர்களைக் காப்பாற்றும் விதமாக தி.மு.க தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி அளித்தபடி சிலிண்டருக்கு ரூ.100 மானியம் வழங்குவார்களா ? தேர்தல் அறிக்கையில் அப்படி ஒரு வாக்குறுதி கொடுத்தது தி.மு.க.வுக்கு நினைவிருக்கிறதா ? என்று கேள்வி எழுப்பியுள்ளார் டிடிவி தினகரன்.

இதையும் படிங்க..TN Rain Alert : மார்ச் 4ம் தேதி தமிழகத்தில் கனமழை ஊத்தப்போகுது..! எந்தெந்த மாவட்டங்கள் தெரியுமா? முழு விபரம்

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

அறிவாலய வாசலில் சாதி தீண்டாமை பார்த்து தடுக்கிறார்கள்..! முன்னாள் எம்.எல்.ஏ ஆவேசம்
அமைச்சர்களின் சொத்து வழக்குக்கு தடையாக உள்ளார்கள்.. ஜி.ஆர் சாமிநாதன், ஆனந்த் வெங்கடேஷ்க்கு எதிராக திமுக இருக்க இதுவே காரணம்..! அண்ணாமலை அதிரடி