
திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவரும், தமிழக முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் இன்று தன்னுடைய 70 வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். இதை முன்னிட்டு நேற்றில் இருந்தே பல பிரபலங்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் தமிழக முதல்வருக்கு தங்களின் பிறந்தநாள் வாழ்த்து தெரிவிக்க துவங்கிய நிலையில், பலர் மு.க.ஸ்டாலினுக்கு தங்களின் பிறந்தநாள் வாழ்த்துக்களை சமூக வலைதளம் மூலமாகவும், அறிக்கை வெளியிட்டும் தெரிவித்து வருகின்றனர்.
மேலும் திமுக தொண்டர்கள், தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களிலும் மு.க.ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு ஏழை - எளிய மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள், பள்ளி மாணவர்களுக்கு நோட்டு , புத்தகங்கள், ஆதரவற்றோர்களுக்கு உணவு, போன்ற நல பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
அதே போல் கட்சி அலுவலகங்களிலும் மக்களுக்கு இனிப்பு வழங்கி திமுக தலைவரின் பிறந்தநாள் வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில், திமுக ஐடி விங் செயல்பாடு ஒரு புதிய மையில் கல்லை எட்டி உள்ளது. நேற்றில் இருந்தே மிகவும் பரபரப்பாக திமுக தலைவரின் பிறந்தநாள் குறித்த ஹேஷ்டேக் சமூக வலைதளத்தில் ட்ரெண்டாகி வந்த நிலையில், இன்று உலக அளவில் #HBDMKStalin70 என்கிற ஹேஷ்டேக் வைரலாகி உள்ளது. இதையும் கொண்டாடி வருகின்றனர் முதல்வரின் தொண்டர்கள்.
'பொன்னியின் செல்வன் 2' புரோமோஷனை துவங்கிய லைகா..! வெளியானது புதிய வீடியோ..!