தமிழ்நாடு ஆசிரியர்கள் நலனுக்காக புதிய திட்டங்களை தனது 70வது பிறந்த நாளான இன்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
தமிழ்நாடு ஆசிரியர்கள் நலனுக்காக புதிய திட்டங்களை தனது 70வது பிறந்த நாளான இன்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
முதல்வர் மு.க.ஸ்டாலின் 70-வது பிறந்தநாள் இன்று தமிழ்நாடு முழுவதும் தொண்டர்கள் கொண்டாடி வருகின்றனர். இதையொட்டி, இன்று காலை தந்தை பெரியார், அண்ணா, முன்னாள் முதல்வர் கருணாநிதி ஆகியோர் நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை செலுத்தினார். இதனையடுத்து, ஆசிரியர்கள் நலனுக்காக புதிய திட்டங்கள் அறிவித்து முதல்வர் ஸ்டாலின் இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார்.
ஆசிரியர்கள் நலனுக்காக புதிய திட்டங்கள்
* ஆசிரியர் பெருமக்களின் உடல்நலம் காக்க அனைத்து ஆசிரியர்களுக்கும் 3 ஆண்டுக்கு ஒரு முறை முழு உடல் பரிசோதனை செய்யப்படும்.
* அனைத்து இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்கும் கைக்கணினி வழங்கப்படும்.
* உயர்கல்வி பயிலும் ஆசிரியர்களின் குழந்தைகளுக்காக தற்போது ஆசிரியர் நல நிதியிலிருந்து வழங்கப்பட்டு வரும் கல்விச்செலவு ரூ.50,000 வரை உயர்த்தி வழங்கப்படும்.
* அரசின் நலத்திட்ட உதவிகளை மாணவர்களிடையே சிறப்பாக கொண்டு சேர்க்கும் ஆசிரியர்கள், வெளிநாடுகளுக்கு கல்வி சுற்றுலா அழைத்துச் செல்லப்படுவர். ரூ.225 கோடி மதிப்பீட்டில் இந்த திட்டங்கள் செயல்படுத்தப்படும் என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.