பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டிருந்ததால் மாணவ மாணவிகளின் கல்வி பாதிப்புக்குள்ளானது. அதனை தடுக்க முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிமுகப்படுத்திய திட்டம் தான் இல்லம் தேடி கல்வி.
தமிழகத்தில் திமுக ஆட்சி அமைந்த பின்னர் மக்களுக்கு பல்வேறு ஆக்கப்பூர்வ திட்டங்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கி வருகிறார். பெண்களுக்கு இலவச பேருந்து பயணம் முதல் பெண்களும் அர்ச்சகராகலாம் திட்டம் வரை பெண்களுக்காக மட்டுமே பல திட்டங்களை அறிவித்து அதனை செயல்படுத்தியுள்ளார் முதல்வர் மு.க.ஸ்டாலின். அத்தோடு மட்டும் அவர் நிறுத்திவிடவில்லை.
கொரோனா காலங்களில் பொதுமுடக்கம் அமலில் இருந்தபோது மக்கள் வீடுகளை விட்டு வெளியே செல்வது மிகவும் கடினமான ஒன்றாக இருந்தது. மேலும் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டிருந்ததால் மாணவ மாணவிகளின் கல்வி பாதிப்புக்குள்ளானது. அதனை தடுக்க முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிமுகப்படுத்திய திட்டம் தான் இல்லம் தேடி கல்வி.
இதையும் படிங்க;- முதல்வர் ஸ்டாலினை சந்திக்க வருபவர்களுக்கு என்ன கிப்ட் கொடுக்க போறாரு தெரியுமா? கேட்டா ஷாக் ஆகிடுவீங்க.!
இல்லம் தேடி கல்வி:
இந்த திட்டத்தின் மூலம், மாணவர்களின் வீடுகளுக்கே சென்று அவர்களுக்கு வகுப்புகள் நடத்தப்பட்டது. பள்ளி முடிந்த பிறகு மாலை 5 மணி முதல் ஏழு மணிவரை மாணவர்களுக்கு நாள் ஒன்றுக்கு ஒன்றரை மணி நேரத்துக்கு மிகாமல் வகுப்பு நடத்தப்பட்டது. இந்த திட்டம் 1.7 லட்சம் தன்னார்வலர்கள் மற்றும் தொண்டு நிறுவனங்களைக் கொண்டு செயல்படுத்தப்படுகிறது. தன்னார்வலர்களுக்கு மாதம் 1,000 ரூபாய் சம்பளம் வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது.
இன்னுயிர் காப்போம் திட்டம்:
தற்போது சாலை விபத்துகள் அதிகரித்து வரும் நிலையில் சாலை விபத்துகளில் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையைக் குறைக்க கொண்டுவரப்பட்ட திட்டமே இன்னுயிர் காப்போம் திட்டம். இந்த திட்டத்தின் கீழ், சாலை விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு, முதல் 48 மணி நேர அவசர சிகிச்சைக்கான செலவை அரசு மேற்கொள்ளும். இதன் மூலம், விபத்தில் பாதிக்கப்பட்ட நபர் ஒருவருக்கு ஒரு லட்சம் ரூபாய் வரை சிகிச்சை வரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதில், 81 வகையான தேர்ந்தெடுக்கப்பட்ட மருத்துவ முறை செயல்படுத்தப்படும்.
இந்தத் திட்டத்துக்காக, சாலையோரங்களில் உள்ள தனியார், அரசுத் தலைமை மருத்துவமனை, மருத்துவக் கல்லூரி மருத்துவமனை என்று மொத்தம் 609 மருத்துவமனைகள் கண்டறியப்பட்டுள்ளன. முதற்கட்டமாக 50 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த திட்டத்தின் மூலமாக, முதலமைச்சரின் மருத்துவக் காப்பீட்டு அட்டை இருப்பவர்கள் மட்டுமின்றி, இல்லாதவர்களும், பிற மாநிலத்தவர், வெளிநாட்டவர் என்று அனைவர்க்கும் வருமான வரம்பு எதுவும் கணக்கில் கொள்ளாமல், தமிழக எல்லைப் பகுதிக்குள் நடக்கும் சாலை விபத்துகளில் சிக்குவோருக்கு முதல் 48 மணி நேரத்துக்குக் கட்டணமில்லாது மருத்துவச் சிகிச்சை வழங்கப்படுகிறது.
இதையும் படிங்க;- தந்தையை மிஞ்சிய மகன்.. மாற்றுத் திறனாளிகள் & திருநங்கைக்களுக்கு நலத்திட்டங்களை வாரி வழங்கிய முதல்வர் ஸ்டாலின்
மக்களைத் தேடி மருத்துவம்:
மக்களைத் தேடி மருத்துவம் திட்டம் மூலம் மக்களின் வீடுகளுக்கே சென்று அவர்களுக்கு சக்கரை, ரத்த கொதிப்பு போன்ற தொற்று இல்லாத நோய் குறித்து பரிசோதனை செய்து அவர்களுக்கு தேவையான மருந்துகள் இலவசமாக வழங்கப்பட்டது. இந்த திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த 2021 ஆம் ஆண்டு தொடங்கிவைத்தார். அரசின் மருத்துவ சேவைகள் பொதுமக்களின் இல்லங்களுக்கு நேரடியாகச் சென்று வழங்குவது இந்த திட்டத்தின் பிரதான நோக்கம்.
இந்த திட்டம் சுகாதார ஆய்வாளர்கள், கிராமப்புற செவிலியர்கள் மற்றும் தன்னார்வலர்கள் போன்றவர்கள் மூலம் செயல்படுத்தப்படுகிறது. மக்களைத்தேடி மருத்துவம் திட்டத்தின் ஒரு பகுதியாக, நடமாடும் மருத்துவ சேவை திட்டமும் கொண்டுவரப்பட்டது. இந்த திட்டத்தில், ஒரு நடமாடும் மருத்துவ வாகனத்தில், ஒரு மருத்துவர், ஒரு செவிலியர், ஒரு சுகாதார ஊழியர் மற்றும் வாகன ஓட்டுநர் இருப்பர். இந்த வாகனங்கள் தமிழகத்தில் உள்ள அனைத்து கிராமப்புற பகுதிகளுக்கும் நேரடியாகச் சென்று அங்கு மருத்துவ முகாம்களை நடத்தும். இதன் மூலம், தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் உள்ள கிராமங்களுக்கு மருத்துவ சேவை கிடைப்பது உறுதிசெய்யப்படுகிறது.
இவ்வாறு பெண்கள், குழந்தைகள், மாணவ மாணவிகள் என அனைத்து தரப்பு மக்களின் நலனையும் கருத்தில் கொண்டு செயல்படும் முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்னும் பல்வேறு மக்கள் நல திட்டங்களை கொண்டு வருவார் என அவரது திட்டங்களால் பயன்பெற்றவர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.