பாஜக, பாமக இருக்கும் கூட்டணியில் விடுதலை சிறுத்தை கட்சி இருக்காது- திருமாவளவன் அதிரடி

By Ajmal Khan  |  First Published Mar 1, 2023, 7:48 AM IST

அம்பேத்கரை இந்துத்துவ அடையாளமாக திடீரென பாஜக ஆர்எஸ்எஸ் காட்டுகிறார்கள். இதை விட அயோக்கியத்தணம் வேறு என்ன இருக்க முடியும் என திருமாவளவன் கேள்வி எழுப்பியுள்ளார். 


திருமாவளவன் போராட்டம்

தமிழ்நாட்டில் சட்டம்-ஒழுங்கை சீர்குலைத்து, தமிழகத்தில் பதற்றத்தை உருவாக்க பாஜக முயல்வதாக குற்றம்சாட்டி விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் தலைமையில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நேற்று மாலை கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கேஎஸ் அழகிரி, மதிமுக சார்பாக துரை வைகோ, வாழ்வுரிமை கட்சி சார்பாக வேல்முருகன் உள்ளிட்டவர்கள் பங்கேற்று பாஜகவிற்கு எதிராக முழக்கமிட்டனர்.

Latest Videos

மோடியின் முகத்திரை தோலுரிக்கப்பட்டுள்ளது

இந்த ஆர்பாட்டத்தின் போது பேசிய திருமாவளவன், பிபிசியின் ஆவணப்படம் மோடியின் முகத்திரையை தோலுரித்துக் காட்டுகிறது. கோத்ரா ரயிலில் வந்த பயணிகளை  தீ வைத்து எரித்தது சங்ப்பரிவார் அமைப்பினர் தான். இஸ்லாமியர்களை கொல்ல வேண்டும் என்பதற்காக சொந்த மதத்தைச் சேர்ந்த துறவிகளையே கொன்ற கும்பல் தான் ஆர்எஸ்எஸ் அதைத்தான் பிபிசி ஆவணபடம் ஆதாரத்தோடு வெளியிட்டதாக தெரிவித்தார்.

தந்தையை மிஞ்சிய மகன்.. மாற்றுத் திறனாளிகள் & திருநங்கைக்களுக்கு நலத்திட்டங்களை வாரி வழங்கிய முதல்வர் ஸ்டாலின்

வன்முறையை பாஜக திட்டம்

தமிழ்நாட்டில் பா.ஜ.க. உள்ளிட்ட சனாதன சக்திகளால் வன்முறை தூண்டப்படுகிறது. சட்டம்-ஒழுங்கை சீர்குலைத்து தி.மு.க. அரசுக்கு எதிரான ஒரு சூழலை உருவாக்க நினைக்கிறார்கள். தமிழகத்தில் பா.ஜ.க. தலைவர்களின் பேச்சுக்கள் வன்முறையை தூண்டும் வகையில்தான் இருக்கின்றன. அண்மையில் நடைபெற்ற ராஜஸ்தான், மத்திய பிரதேசம், மிசோரம், சத்தீஷ்கார் உள்ளிட்ட 5 மாநில தேர்தல்கள் வரும் போது வன்முறைகள் கட்டவிழ்க்கப்பட்டது போன்று தமிழகத்திலும் தேர்தல் நெருங்கும் போது வன்முறையை தூண்ட ஆர்எஸ்எஸ் திட்டமிடும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை எச்சரித்தார்.அம்பேத்கரை இந்துத்துவ அடையாளமாக திடீரென பாஜக ஆர்எஸ்எஸ் காட்டுகிறார்கள். இதை விட அயோக்கியத்தணம் வேறு என்ன இருக்க முடியும். தமிழ்நாட்டில் தொடர்ந்து பதற்றத்தை உருவாக்கி கொண்டே இருக்கிறார்கள். நம்முடைய கொள்கை ஆசான் அம்பேத்கர்,பாஜகவின் கொள்கை ஆசான் கோல்வால்கர் என கூறினார்.

காவல் துறை யார் கட்டுப்பாட்டில் உள்ளது

தி.மு.க. ஆட்சியில் கி.வீரமணியின் காரை சூழ்ந்து அச்சுறுத்துவதை பார்க்கும் போது தமிழ்நாட்டில் காவல்துறை பா.ஜ.க. கட்டுப்பாட்டில் இருக்கிறதா? என்று சந்தேகிக்க தோன்றுகிறது. தமிழகத்தில் காவல்துறை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கட்டுப்பாட்டில் தான் இருக்க வேண்டும். பா.ம.க., பா.ஜ.க. அரசியல் ரீதியாக என்ன பின்னடைவு ஏற்பட்டாலும் பா.ஜ.க., பா.ம.க. இருக்கும்கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி  இருக்க மாட்டோம். அகில இந்திய அளவில் பா.ஜ.க.வுக்கு எதிரான அணியை தி.மு.க. ஒருங்கிணைக்க வேண்டும் என திருமாவளவன் கேட்டுக்கொண்டார்.  

இதையும் படியுங்கள்

ஜிஎஸ்டி வரி வசூலிப்பதை மாநில அரசு ஏற்று நடத்த வேண்டும் - அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்

click me!