
மதுபான ஊழல் வழக்கில் ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்ட டெல்லி துணைமுதல்வர் மணிஷ் சிசோடியா, திங்கள்கிழமை சிபிஐ நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டார்.
அவரை 5 நாட்கள் காவலில் விசாரிக்க நீதிமன்றம் அனுமதி வழங்கியது. சிபிஐ கைது நடவடிக்கையை எதிர்த்து மணிஷ் சிசோடியா உச்ச நீதிமன்றத்தில் இன்று மனு தாக்கல் செய்துள்ளார். இந்த நிலையில் டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா ராஜினாமா செய்துள்ளார்.
டெல்லி அமைச்சர்கள் மணீஷ் சிசோடியா மற்றும் சத்யேந்தர் ஜெயின் ஆகியோர் மாநில அமைச்சரவையில் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்தனர். அவர்களின் ராஜினாமாவை முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் ஏற்றுக்கொண்டார். இது டெல்லி அரசியலில் சலசலப்பை உண்டாக்கியுள்ளது.
இதையும் படிங்க..Erode East By-Election: ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்.. வெல்லப்போவது எந்த கட்சி.? வெளியானது பரபர சர்வே முடிவுகள்
இதையும் படிங்க..Bank Holiday : மார்ச் மாதத்தில் வங்கி விடுமுறை எத்தனை நாட்கள் தெரியுமா.? முழு விபரம் உள்ளே !!