பிரதமர் மோடியுடன் அமைச்சர் உதயநிதி சந்திப்பு... கேலோ இந்தியா விளையாட்டை தமிழகத்தில் நடத்த கோரிக்கை!!

By Narendran S  |  First Published Feb 28, 2023, 5:09 PM IST

அரசு முறை பயணமாக டெல்லி சென்றுள்ள தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிரதமர் மோடியை சந்தித்து பேசியுள்ளார். 


அரசு முறை பயணமாக டெல்லி சென்றுள்ள தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிரதமர் மோடியை சந்தித்து பேசியுள்ளார். அமைச்சரான பிறகு முதல் முறையாக தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இரண்டு நாள் பயணமாக டெல்லி சென்றுள்ளார். அங்கு முன்னாள் தமிழக ஆளுநரும் தற்போதைய பஞ்சாப் ஆளுநருமான பன்வாரிலால் புரோகித்தின் பேத்தி பூஜா-சிவம் திருமண வரவேற்பு நிகழ்ச்சி உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துக்கொண்டார்.

இதையும் படிங்க: டெல்லி துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடியாவை கைது செய்த சிபிஐ.. பாஜகவை விளாசி தள்ளிய திமுக !!

Latest Videos

இதனிடையே டெல்லியில் பிரதமர் மோடியை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சந்தித்து பேசினார். அப்போது பிரதமர் மோடிக்கு திருவள்ளுவர் சிலையை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார். டெல்லியில் உள்ள பிரதமர் மோடியின் இல்லத்தில் நடைபெற்ற இந்த சந்திப்பு குறித்து செய்தியாளர்களிடம் பேசிய உதயநிதி ஸ்டாலின், பிரதமர் மோடியை சந்தித்தது மரியாதை நிமித்தமானது. பிரதமர் மோடியிடம் நீட் விலக்கு குறித்து பேசினேன். முதல்வர் உடல்நலம் குறித்து மோடி என்னிடம் விசாரித்தார். மோடியின் தாயார் மறைவுக்கு இரங்கல் தெரிவித்தேன். தமிழகத்தில் விளையாட்டு மைதானங்கள் அமைப்பது குறித்து பிரதமர் மோடியிடம் கோரிக்கை விடுத்தேன். மேலும் கேலோ இந்தியா விளையாட்டை தமிழகத்தில் நடத்த வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டேன். அரசியல் குறித்து எதும் பேசவில்லை என்று தெரிவித்துள்ளார். 

இதையும் படிங்க: அரசியலை தாண்டி ஸ்டாலினுடன் நட்பு..! நாடாளுமன்றத் தேர்தலில் திமுகவுடன் கூட்டணியா..? கமல்ஹாசன் பரபரப்பு தகவல்

ஏற்கனவே மத்திய ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் கிரிராஜ் சிங்கை சந்தித்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், தமிழகத்திற்கு தேவையான ஊரக வளர்ச்சி திட்டத்தின் நிலுவையில் உள்ள நிதியை உடனடியாக வழங்க வலியுறுத்தியிருந்தார். அத்தோடு ஊரக வளர்ச்சியில் இளைஞர்களுக்கு விளையாட்டு சார்ந்த போட்டிகளில் ஊக்குவிப்பது தொடர்பாகவும் பேசியதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் தான் பிரதமர் மோடியை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சந்தித்துள்ளார். அவரை தொடர்ந்து மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவையும் சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

click me!