கலவரமாக மாறிய அதிமுக ஆலோசனை கூட்டம்… தூக்கி வீசப்பட்ட நாற்காலிகள்… 3 பேருக்கு மண்டை உடைப்பு!!

Published : Jul 08, 2022, 11:28 PM IST
கலவரமாக மாறிய அதிமுக ஆலோசனை கூட்டம்… தூக்கி வீசப்பட்ட நாற்காலிகள்… 3 பேருக்கு மண்டை உடைப்பு!!

சுருக்கம்

இராமநாதபுரத்தில் நடைபெற்ற அதிமுக ஆலோசனை கூட்டத்தில் ஒபிஎஸ்-ஈபிஎஸ் ஆதரவாளர்களிடையே ஏற்பட்ட மோதலில் 3 பேர் படுகாயமடைந்தனர். 

இராமநாதபுரத்தில் நடைபெற்ற அதிமுக ஆலோசனை கூட்டத்தில் ஒபிஎஸ்-ஈபிஎஸ் ஆதரவாளர்களிடையே ஏற்பட்ட மோதலில் 3 பேர் படுகாயமடைந்தனர். இராமநாதபுரத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் அதிமுகவின் ஒற்றை தலைமையை வலியுறுத்தி ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. மாவட்ட செயலாளர் எம்.ஏ.முனியசாமி தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில், ஓபிஎஸ் தரப்பை சேர்ந்த ஆதரவாளர்கள் உள்ளே புகுந்து எடப்பாடி பழனிச்சாமியை ஒற்றை தலைமை கொண்டுவர தீர்மானம் நிறைவேற்றப்பட உள்ளதாக கூறியதை அடுத்து ஓபிஎஸ் தரப்பினர் ரகளையில் ஈடுபட்டு கட்சி நிர்வாகிகள் அமர்வதற்காக போடப்பட்டிருந்த நாற்காலிகளை தூக்கி வீசினர். இதை அடுத்து ஓபிஎஸ், ஈபிஎஸ் ஆதரவாளர்களிடையே மோதல் அடிதடி ஏற்பட்டது.

இதையும் படிங்க: கொடநாடு கொலை குற்றவாளியை எப்போ தூக்கப் போறீங்க.? ஸ்டாலினை விடாமல் கேள்வி கேட்கும் ஓபிஎஸ் தரப்பு.!

இதில் ஒருவருக்கொருவர் நாற்காலிகளால் தாக்கிக்கொண்டனர். இதனால் அப்பகுதி முழுவதும் கலவரம் போல் காட்சியளித்தது. இதனை தொடர்ந்து அங்கு காவல்துறையின் வந்து கூட்டத்தை கலைத்தனர். இதில் ஈபிஎஸ் தரப்பைச் சேர்ந்த 3 பேர் மண்டை உடைக்கப்பட்டு இராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். பின்னர் அதிமுகவின் ஒற்றை தலைமை வலியுறுத்தி ஆலோசனை கூட்டம் தொடர்ந்து நடைபெற்றது.

இதையும் படிங்க: அதிமுக என்ன சாதி கட்சியா? கட்சி ஆபிசுக்கு கண்டிப்பா வருவேன் - பயமுறுத்தும் சசிகலா

அதில் தமிழக எதிர்க்கட்சித் தலைவரான எடப்பாடி பழனிச்சாமியை ஒற்றை தலைமையாக கொண்டுவர தீர்மானம் நிறைவேற்றி உள்ளதோடு அதிமுக ஒற்றை தலைமை வலியுறுத்தி நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் மணிகண்டன் தன்னுடைய ஆதரவாளர்களை அனுப்பி கூட்டத்தை சீர்குலைக்கும் நோக்கத்தில் நடந்து கொண்டதை அடுத்து அவரை கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றியுள்ள தோடு அதனை தலைமை கழக நிர்வாகிகளிடம்  ஒப்படைக்கப்பட உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.  

PREV
click me!

Recommended Stories

மதத்தின் பெயரால் உணர்வுகளை தூண்டினால் அவரிடம் கவனமாக இருக்க வேண்டும்... கிறிஸ்தவ விழாவில் ஸ்டாலின் பாவ எச்சரிக்கை..!
அனிதா தற்கொலையை திமுக தடுத்து இருக்கலாமே... பூர்ணசந்திரன் மரணத்தை திரித்துக் கூறுவதா..? டாக்டர் சரவணன் ஆவேசம்..!