இளம் மருமகளுக்கு மாமனார் தீராக செக்ஸ் டார்ச்சர்: கண்டுகொள்ளதாக கணவன். சொர்கத்துக்கு அனுப்பிய அண்ணன்கள்.

By Ezhilarasan BabuFirst Published Nov 20, 2020, 11:47 AM IST
Highlights

விசாரணையில் ஜெயமாலாவின் அண்ணன் கைலாஷ் தனது சகோதரியை தலீல்சந்த் மற்றும் அவர்களது உறவினர்கள் பாலியல் தொந்தரவு கொடுத்து வந்ததாகவும் இதை சீத்தல் குமார் கண்டும் காணாமல் இருப்பதாக ஜெயமாலா தங்களிடம் கூறி கண்ணீர் விட்டு அழுததாகவும், அதனால் இவர்களை கொலை செய்ய திட்டமிட்டதாகவும் ஒப்புக்கொண்டுள்ளார்.

தனது சகோதரிக்கு கணவனின் தந்தை மற்றும் உறவினர்கள்  தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்து வந்ததால் அவர்களை கொன்றோம் என  சவுர்கார்பேட்டையில் மூன்று பேரை சுட்டுக்கொன்ற வழக்கில் கைது செய்யப்பட்ட குற்றவாளிகளின் பகீர் வாக்குமூலம் அளித்துள்ளனர். சவுகார்பேட்டையில் கடந்த 11ஆம் தேதி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் சுட்டுக் கொலை செய்யப்பட்ட வழக்கில் மருமகள் ஜெய மாலாவின் அண்ணன் கைலாஷ் அவர்களது நண்பர்களான ரபீந்திரநாத் கர் மற்றும் விஜய் உத்தம் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். 

கைது செய்யப்பட்ட மூவரையும் விசாரணை செய்வதற்காக போலீசார் அவர்களை 10 நாட்கள் போலீஸ் கஸ்டடியில் நேற்று எடுத்தனர். மூவரிடமும் தனித்தனியாக நேற்று இரவு விடிய விடிய விசாரணை நடத்தப்பட்டது. விசாரணையில் ஜெயமாலாவின் அண்ணன் கைலாஷ் தனது சகோதரியை தலீல்சந்த் மற்றும் அவர்களது உறவினர்கள் பாலியல் தொந்தரவு கொடுத்து வந்ததாகவும் இதை சீத்தல் குமார் கண்டும் காணாமல் இருப்பதாக ஜெயமாலா தங்களிடம் கூறி கண்ணீர் விட்டு அழுததாகவும், அதனால் இவர்களை கொலை செய்ய திட்டமிட்டதாகவும் ஒப்புக்கொண்டுள்ளார். கொலை செய்ய பயன்படுத்தப்பட்டது நாட்டுதுப்பாக்கி எனவும், அதேபோல் தன் தம்பி விலாஸ் வைத்திருந்தது முன்னாள் விமானப்படை அதிகாரியின் துப்பாக்கி எனவும் தெரிவித்துள்ளார். 

விலாஸ் ஒரு வழக்கறிஞர் என்பதால் அதன்மூலம் முன்னாள் விமானப்படை அதிகாரி ஒருவரின்  நட்பால் அந்த துப்பாக்கி அவருக்கு கிடைத்தது எனவும், அதனால் அந்த விமானப்படை அதிகாரியின் லைசென்ஸ் துப்பாக்கியை சில காலம் வைத்திருக்கும்படி விலாஸ் தண்ணிடம் கொடுத்ததாகவும் கூறியுள்ளார். அந்தத் துப்பாக்கியை கொலை செய்ய தான் எடுத்து வந்ததாகவும் கைலாஷ் போலீஸ் விசாரணையில் கூறியுள்ளார்.  அதேபோல விலாஸுக்கு பழக்கமான ஓய்வு பெற்ற ராணுவ வீரரின் காரை சிலகாலம் பயன்படுத்திவிட்டு தருவதாக கூறி அந்த காரையும் இந்த கொலைச்சம்பவத்திற்கு விலாஸ் பயன்படுத்தியுள்ளார் என விசாரணையில் தெரியவந்துள்ளது. விளாஸ் வைத்திருந்த துப்பாக்கி, லைசென்ஸ் துப்பாக்கி என்பதால் முன்னாள் விமானப்படை அதிகாரியின் விவரங்களை சேகரித்து அவரிடம் விசாரிக்க போலீசார் திட்டமிட்டுள்ளனர்.
 

click me!