தேர்தல் ஆணையம் செயல்படுகிறதா? இல்லை கல்லறைக்குள் சென்றுவிட்டதா? மோடி பேச்சுக்கு எதிராக எகிறும் மனோ தங்கராஜ்!

By vinoth kumar  |  First Published Apr 23, 2024, 3:29 PM IST

ராஜஸ்தானில் நடைபெற்ற பிரச்சாரத்தின் போது பிரதமர் மோடி காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் உங்கள் கழுத்தில் இருக்கும் தாலி கூட மிஞ்சாது. உங்கள் சொத்துக்களையும், பொருட்கள் அனைத்தையும் இஸ்லாமியர்களுக்கு பங்கு போட்டு கொடுத்து விடுவார்கள் என்று கூறினார். 


 ஒரு ஜனநாயக நாட்டின் பிரதமர் ஓட்டுக்காக மக்களை பிரிக்கும் முயற்சியாக இப்படி மத வெறுப்புடன் பேசுவது அவர் வகிக்கும் பதவிக்கே இழுக்கு என தமிழக அமைச்சர் மனோ தங்கராஜ் கூறியுள்ளார். 

நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரம் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் ராஜஸ்தானில் நடைபெற்ற பிரச்சாரத்தின் போது பிரதமர் மோடி காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் உங்கள் கழுத்தில் இருக்கும் தாலி கூட மிஞ்சாது. உங்கள் சொத்துக்களையும், பொருட்கள் அனைத்தையும் இஸ்லாமியர்களுக்கு பங்கு போட்டு கொடுத்து விடுவார்கள் என்று கூறினார். இவரது பேச்சு மிகப்பெரிய சர்ச்சையை கிளப்பியுள்ளது. காங்கிரஸ் கட்சி சார்பாக தேர்தல் ஆணையத்திலும் புகார் செய்யப்பட்டது. முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில் தமிழக பால்வளத்துறை அமைச்சரான மனோ தங்கராஜ் பிரதமர் மோடியின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார். 

Tap to resize

Latest Videos

undefined

இதையும் படிங்க: பிரதமர் மோடி வெறுப்பு பேச்சு: டெல்லி காவல் நிலையத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் புகார்!

இதுதொடர்பாக பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் வெளியிட்டுள்ள எக்ஸ் தளத்தில்: தேர்தல் ஆணையம் செயல்படுகிறதா? இல்லை, கல்லறைக்குள் சென்று விட்டதா?

தேர்தல் பிரச்சாரங்களில்:

- காங்கிரஸ் தேர்தல் அறிக்கையை பார்த்து "இது முஸ்லிம் லீக் தேர்தல் அறிக்கை போல் உள்ளது" எனக் கூறினார் மோடி.
- காஷ்மீரில் தாவர உணவு சாப்பிடுகின்ற மக்கள் மத்தியில் பேசும்போது மாமிச உணவு சாப்பிடுபவர்களை பற்றி கொச்சையாக விமர்சித்தார் மோடி.
- நேற்று ராஜஸ்தானில் "காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் உங்கள் கழுத்தில் இருக்கும் தாலி கூட மிஞ்சாது, உங்கள் சொத்துக்களையும், பொருட்கள் அனைத்தையும் இஸ்லாமியர்களுக்கு பங்கு போட்டு கொடுத்து விடுவார்கள்" என்று கூறியுள்ளார் மோடி.

இதிலிருந்து மோடியின் பேச்சில் தோல்வி பயமும், விரக்தியும் வெளிப்படையாகவே தெரிகிறது. ஒரு ஜனநாயக நாட்டின் பிரதமர் ஓட்டுக்காக மக்களை பிரிக்கும் முயற்சியாக இப்படி மத வெறுப்புடன் பேசுவது அவர் வகிக்கும் பதவிக்கே இழுக்கு என ஆவேசமாக தெரிவித்துள்ளார். 

இதையும் படிங்க: இந்தியாவை ஆட்சி செய்யும் நவீன கோயபல்ஸ் மோடி... உரிய பாடத்தை மக்கள் தேர்தலில் வழங்குவார்கள்- செல்வப் பெருந்தகை

click me!