பிரபல ஊடகவியலாளர் சவுக்கு சங்கர் மீதான சிறைத் தண்டனைக்கு உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடைவிதித்த நிலையில், 4 வழக்குகளில் மீண்டும் கைது செய்யப்பட்டிருக்கிறார் சவுக்கு சங்கர்.
தமிழக லஞ்ச ஒழிப்பு துறையில் பணிபுரிந்த முன்னாள் அதிகாரியும் தற்போது சவுக்கு இணையதளத்தை நடத்தி வருபவர் பத்திரிகையாளர் சவுக்கு சங்கர்.
நீதித்துறையை சர்ச்சைக்குரிய வகையில் விமர்சனம் செய்ததாக, தானாக முன்வந்து பதிவு செய்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் சவுக்கு சங்கருக்கு 6 மாதம் சிறை தண்டனை விதித்து கடந்த செப்டம்பர் மாதம் 15-ம் தேதி உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்தது.
இதையும் படிங்க..கனமழை காரணமாக பள்ளி - கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை.. எந்தெந்த மாவட்டங்கள் தெரியுமா ? முழு விபரம் இதோ
அதன்படி, தற்போது கடலூர் சிறையில் தனது சிறை தண்டனையை அனுபவித்து வந்தார் சவுக்கு சங்கர். இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் சவுக்கு சங்கர் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை தொடர்பாக சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை பதிவாளர் மற்றும் ட்விட்டர், பேஸ்புக், யூடியூப் தொடர்பாக தகவல் தொழில்நுட்ப துறை செயலாளர்கள் விளக்கம் அளிக்கவும் உத்தரவிட்ட நீதிபதிகள் சவுக்கு சங்கருக்கு விதிக்கப்பட்ட தண்டனைக்கு இடைக்கால தடை விதித்தனர்.
இதையும் படிங்க.பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் கொடுத்த சர்ப்ரைஸ் புத்தகம் என்ன ? அட.! இந்த நாவலா ?
மேலும் சிறையில் இருந்து விடுதலை ஆகும் சவுக்கு சங்கர் அடுத்து விசாரணை வரை சமூக வலைதளங்களிலோ செய்தி ஊடங்களுக்கோ எந்தவித பேட்டியும் அளிக்கக்கூடாது எனவும் நிபந்தனை விதித்தனர். இதனால் சவுக்கு சங்கர் இன்று அல்லது நாளை சிறையில் இருந்து விடுதலை ஆவார் என எதிர்பார்க்கப்பட்டது. இன்று சவுக்கு சங்கர் விடுதலை ஆவார் என்று தெரிந்தவுடன் பழைய வழக்குகளின் அடிப்படையில் நேற்று முன்தினமே மீண்டும் அவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதையும் படிங்க..எடப்பாடி Vs ஓபிஎஸ்! இருவரையும் சந்திக்காத பிரதமர் மோடி - வெளியான அதிர்ச்சி காரணம் !