தமிழர் விரோத ஆளுநர் பதவி விலகுவதே சரி… தொல்.திருமாவளவன் பரபரப்பு கருத்து!!

Published : Nov 11, 2022, 07:23 PM IST
தமிழர் விரோத ஆளுநர் பதவி விலகுவதே சரி… தொல்.திருமாவளவன் பரபரப்பு கருத்து!!

சுருக்கம்

ஆறு பேர் விடுதலை தமிழர் விரோத ஆளுநர் பதவி விலகுவதே சரியாகும் என விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார். 

ஆறு பேர் விடுதலை தமிழர் விரோத ஆளுநர் பதவி விலகுவதே சரியாகும் என விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார். முன்னதாக ராஜிவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் இருக்கும் 7 பேர் விடுதலை தொடர்பாக தமிழக அமைச்சரவை தீர்மானத்தின் மீது ஆளுநர் முடிவெடுக்காமல் இழுத்தடித்து வந்தார். இதற்கு பலரும் கண்டனம் தெரிவித்து வந்தனர். பின்னர் சட்டப் போராட்டங்களின் முடிவாக, தனது சிறப்பு அதிகாரத்தைப் பயன்படுத்தி பேரறிவாளனை மே 18 அன்று உச்ச நீதிமன்றம் விடுதலை செய்ய உத்தரவிட்டது. இதனை முன்னிறுத்தி நளினி, ரவிச்சந்திரன் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தையும் பின்னர் மேல்முறையீடாக உச்சநீதிமன்றத்தையும் நாடினர்.

இதையும் படிங்க: தமிழகம் வந்த பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு கொடுத்த பொதுமக்கள் - வைரல் புகைப்படங்கள் !!

அவர்கள் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை பரிசீலித்த உச்ச நீதிமன்றம் பேரறிவாளனுக்கு வழங்கப்பட்ட தீர்ப்பு இவர்களுக்கும் பொருந்தும் என்ற முடிவுக்கு வந்தது. முன்னதாக இடையீட்டு மனு மூலம் சாந்தன், ஹரிஹரன், ராபர்ட் பயஸ், ஜெயக்குமார் ஆகிய நால்வரும், நளினி, ரவிச்சந்திரன் தொடுத்த மேல்முறையீட்டில் இணைந்து கொண்டனர். விசாரணை முடிந்த நிலையில், மனுதாரர்கள் 6 பேரையும் விடுதலை செய்ய உத்தரவிட்டு உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது.

இதையும் படிங்க: சங்க கால தமிழர்கள்.. தமிழ்நாட்டின் கலாச்சாரம்.! அசத்தலாக தமிழில் பேசிய பிரதமர் மோடி !

இந்த நிலையில் ஆறு பேர் விடுதலை தமிழர் விரோத ஆளுநர் பதவி விலகுவதே சரியாகும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார். இதுக்குறித்து அவர் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், ஆறு பேர் விடுதலை ஆறுதல் அளிக்கிறது. மிகவும் காலம் தாழ்ந்த விடுதலை எனினும் நீண்டகால ஏக்கம் தணிக்கிறது. ஒட்டுமொத்த தமிழ்ச் சமூகத்தின் ஓயாத போராட்டத்திற்குக் கிடைத்த உன்னத வெற்றி. தமிழர் விரோத ஆளுநருக்கு தக்கபாடம் புகட்டியுள்ள தனிப்பெரும் தீர்ப்பு. ஆளுநர் பதவி விலகுவதே சரியாகும் என்று தெரிவித்துள்ளார். 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

பாஜகவையே பைபாஸ் செய்யும் எடப்பாடி... கையை பிசையும் அமித் ஷா அண்ட் கோ..!
மதம் உண்மையில் பிரபஞ்சத்தின் அறிவியல்..! மோகன் பகவத் அசத்தல் விளக்கம்..!