திமுக ஆட்சியில் எல்லாமே கமிஷன்.. முதல்வருக்கு தெரியுமா? ஸ்டாலினை வம்புக்கு இழுத்த வானதி சீனிவாசன்

By Raghupati RFirst Published Jul 23, 2022, 11:53 PM IST
Highlights

மின் கட்டணத்தை உயர்த்திய தமிழக அரசை கண்டித்து தமிழகம் முழுவதும் இன்று பாஜக சார்பில் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றது.

தமிழக அரசின் மின் கட்டண உயர்வை கண்டித்து தமிழகம் முழுவதும் பாஜக சார்பில் இன்று ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றது.கோவையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டார் பாஜக எம்.எல்.ஏ வானதி சீனிவாசன். ஆர்ப்பாட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய வானதி சீனிவாசன், ‘சமுதாயத்தில் அனைவரையும் பாதிக்ககூடிய அளவில் மின்கட்டணத்தை உயர்த்தி இருக்கிறார்கள். மத்திய அரசு கூறியதால் கட்டணத்தை உயர்த்தி உள்ளோம் என உண்மைக்கு புறம்பாக திமுக பதில் அளித்துள்ளது.

மேலும் செய்திகளுக்கு.."எல்லாமே ரத்து.. அதிமுகவில் வாங்க சேர்ந்து செயல்படுவோம்"- ஓபிஎஸ் திடீர் பல்டி

தமிழகத்தில் அனைத்தையும் நாங்களாகவே பார்த்துகொள்ள முடியும் அனைத்தையும் நாங்களாகவே நிர்வகித்து கொள்ள முடியும் என ஒருபுறம் கூறி விட்டு, மறுபுறம் மின்சாரம் மாதிரியான தேவையானவற்றை கூட கொடுக்க முடியாத சூழ்நிலையில் திமுக அரசு நடந்து கொண்டிருக்கிறது. அரசின் அனைத்து துறைகளிலும் லஞ்சம் தலை விரித்து ஆடுகிறது. அமைச்சரின் பெயரில் குடும்பத்தினர் ஒவ்வொரு ஹோட்டலிலும் தங்கி கமிஷன் வாங்கி கொண்டு அவார்டு தருகிறார்கள்.

முதல்வர் ஸ்டாலினுக்கு இதனை எல்லாம் கவனிக்க நேரம் உள்ளதா என தெரியவில்லை. இதனையெல்லாம் கவனித்திருந்தால் காவல்துறையை வைத்திருக்க கூடிய முதல்வர் கள்ளக்குறிச்சி சம்பவம் போன்றவற்றை தவிர்த்திருக்க முடியும். முதல்வரின் கட்டுபாட்டில் காவல்துறை மட்டுமல்லாமல், எந்த அமைச்சர்களும் இல்லை என்பது சிறிது சிறிதாக நிரூபணமாகிறது. சிலிண்டர் மற்றும் பெட்ரோல் டீசல் நமது நாட்டில் உற்பத்தியாகவில்லை. அது வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்படுகின்ற பொருள் என்பதால், ஒவ்வொரு நாளும் விலைவாசி மாறிக்கொண்டிருக்கும்.

மேலும் செய்திகளுக்கு..மம்தாவை சிக்கலில் மாட்டிவிட்ட நடிகை.. கோடிக்கணக்கில் பணம் - யார் இந்த அர்பிதா முகர்ஜி ?

நமது கட்டுப்பாட்டில் உள்ளவற்றை நாம் சரியாக செய்கிறோமா என்பது தான் விஷயம். தேர்தல் வாக்குறுதியில் பெட்ரோல், டீசல் விலை குறைப்போம் என்று வாக்குறுதி அளித்தும் ஏன் குறைக்கவில்லை. தமிழகத்தை பொறுத்தவரை அதிகமாக தொழிற்சாலை இருக்கின்ற மாநிலம். அவ்வாறு இருக்கும் பொழுது அடுத்த பத்து வருடத்திற்கு தேவையான மூலதனத்தை ஏன் உருவாக்கவில்லை. திமுகவிடம் ஐடியா இல்லை. நிர்வாகத் திறமை இல்லை.மத்திய அரசு எந்த திட்டம் கொண்டு வந்தாலும் அதனை எதிர்ப்போம் என மாநில அரசு கூறி வந்தால் மக்கள் தான் பாதிக்கப்படுவார்கள்.  அதற்கு சிறந்த உதாரணம் ஸ்மார்ட் சிட்டி திட்டம்’ என்று கூறினார்.

மேலும் செய்திகளுக்கு..பள்ளியில் மயங்கி விழுந்த ஸ்ரீமதி.. பரபரப்பான சிசிடிவி காட்சிகள் வெளியீடு !

click me!