
மின் கட்டண உயர்வை கண்டித்து பாஜக சார்பில் கன்னியாகுமரி மாவட்டம் தக்கலையில் உள்ள கல்குளம் தாலுகா அலுவலகத்தின் முன்பாக இன்று ஆர்ப்பாட்டம் நடந்தது . இதில் தமிழக பாஜக சட்டமன்ற குழு தலைவரும், சட்டமன்ற உறுப்பினருமான நயினார் நாகேந்திரன் கலந்து கொண்டார். இந்த ஆர்ப்பாட்டத்தில் பேசிய அவர், தமிழக அரசு சமீபத்தில் தான் சொத்து வரியை உயர்த்தியது.
அதில் இருந்து மக்கள் நிம்மதி பெருமூச்சு விடுவதற்கு உள்ளாக தற்போது மின் கட்டணத்தை உயர்த்தி இருக்கிறது தமிழக அரசு. தமிழக மின்சார துறை அமைச்சர் சொல்கிறார், மத்திய அரசு சொன்னதால்தான் கட்டணத்தை உயர்த்தியதாக சொல்லி இருக்கிறார் . ஆனால் மத்திய அரசு எந்த காலகட்டத்திலும் எந்த அரசுக்கும் அப்படி சொல்லவே சொல்லாது.
மேலும் செய்திகளுக்கு.."எல்லாமே ரத்து.. அதிமுகவில் வாங்க சேர்ந்து செயல்படுவோம்"- ஓபிஎஸ் திடீர் பல்டி
மக்களை ஏமாற்றும் அரசாக தமிழக அரசு இருக்கிறது. திமுக தேர்தல் வாக்குறுதியில் சொன்னபடி எதையும் செய்யவில்லை. இல்லத்தரசிகளுக்கு மாதம் தோறும் ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் திட்டம் இன்னும் நிறைவேற்றப்படவில்லை.மக்களால் வரவேற்கப்பட்ட நல்ல திட்டம் பெண்களுக்கான திருமண உதவி திட்டம், தற்போது அதையும் நிறுத்திவிட்டார்கள்.
2024 ஆம் ஆண்டுக்கு ஆண்டு நடைபெற இருக்கும் மக்களவைத் தேர்தல் முடிந்த பின்னால் மகாராஷ்டிராவை போல தமிழகத்திலும் மாற்றம் வரும் என்று எதிர்பார்க்கலாம்’ என்று கூறினார். நயினார் நாகேந்திரன் இப்படி பேசியிருப்பது அரசியல் வட்டாரங்களில் சலசலப்பை உண்டாக்கி உள்ளது.
மேலும் செய்திகளுக்கு..மம்தாவை சிக்கலில் மாட்டிவிட்ட நடிகை.. கோடிக்கணக்கில் பணம் - யார் இந்த அர்பிதா முகர்ஜி ?