செஸ் ஒலிம்பியாட்டுக்கு எனக்கு அழைப்பிதழ் வரல.. இருந்தாலும்... பெருந்தன்மையாக பேசிய தமிழிசை சவுந்திரராஜன்.!

By Asianet Tamil  |  First Published Jul 23, 2022, 10:11 PM IST

செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கு எனக்கு இன்னும் அழைப்பிதழ் வரவில்லை என்று புதுச்சேரி துணை நிலைய ஆளுநர் தமிழிசை சவுந்திரராஜன் தெரிவித்துள்ளார்.


சென்னையை அடுத்த மாமல்லபரத்தில் வரும் 28 ஆம் தொடங்கி ஆகஸ்டு 10 வரை 44-வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் நடைபெறுகின்றன. இந்தப் போட்டிக்காக டெல்லியில் கடந்த மாதம் ஒலிம்பியாட் ஜோதி பயணம் தொடங்கியது. இந்தியாவில் 75 நகரங்கள் வழியாக இந்த ஜோதி எடுத்துச் செல்லப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இதன்படி பல்வேறு மாநிலங்களுக்கு சென்ற இந்த ஜோதி இன்று புதுச்சேரிக்கு வந்தடைந்தது. ஒலிம்பியாட் ஜோதிக்கு வரவேற்பு அளிக்கும் நிக்ழ்ச்ச்சி இந்திரா காந்தி விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் புதுச்சேரி ஆளுநர் தமிழிசை பங்கேற்றார். அப்போது அவர் பேசுகையில், “வருங்கால இந்தியாவை மேம்படுத்த எல்லா முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த செஸ் போட்டி அதற்கு வழிவகை செய்யும். இந்தப் போட்டியில் 186 நாடுகளைச் சேர்ந்த 2,000 செஸ் விளையாட்டு வீரர்கள் பங்கேற்க இருக்கிறார்கள். இந்தியாவில் இருந்து 20-க்கும் மேற்பட்ட வீரர்கள் பங்கேற்கின்றனர். 

இதையும் படிங்க: விமானத்தில் பயணிக்கு திடீர் நெஞ்சுவலி : தக்கநேரத்தில் காப்பாற்றிய தெலங்கானா ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன்

Tap to resize

Latest Videos

செஸ் ஒலிம்பியாட் போட்டியை பிரதமர் மோடி தொடங்கி வைப்பது நமக்கு பெருமை. இப்போது ஒலிம்பிக்கில் மட்டுமல்ல, பாரா ஒலிம்பிக்கில் வெற்றி பெறுபவர்களும் நாட்டில் அதிகம் இருக்கிறார்கள். ஏனென்றால் அவர்கள் ஊக்கப்படுத்தப்படுகிறார்கள். பிரதமர் விளையாட்டு வீரர்களை அழைத்து தேநீர் விருந்து வைக்கிறார். அவர்கள் வெற்றி பெற்றால் தொலைபேசியில் வெற்றியைப் பகிர்ந்து கொள்கிறார். வெற்றி பெறாவிட்டாலும் இந்தியாவுக்கு பெருமை சேர்த்தீர்கள். அடுத்த முறை வெற்றி கிடைக்கும் என்று சொல்கிறார். நம் கலாச்சாரத்தை உலக நாடுகள் அறியும் அளவுக்கு விளையாட்டுப் போட்டி நமக்கு மிகப்பெரிய வாய்ப்பைத் தருகிறது” என்று தெரிகிறார். 

இதையும் படிங்க: வரும் 28 ஆம் தேதி உள்ளூர் விடுமுறை.. இந்தெந்த மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை.. அமைச்சர் அறிவிப்பு..

நிகழ்ச்சிக்கு பின்னர் செய்தியாளர்களை தமிழிசை சந்தித்தார். அபோது அவர் கூறுகையில், “‘செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கான அழைப்பிதழ் பலருக்கும் கொடுத்துக்கொண்டிருக்கிறார்கள். எனக்கு இன்னும் அழைப்பிதழ் வரவில்லை. ஆனால், தமிழகத்திலும், இந்தியாவிலும் எது நடந்தாலும் எனக்கு பெருமை. நிச்சயமாக அதில் நான் பங்கேற்பேன். விமானத்தில் சக பயணி ஒருவர் மயக்கமடைந்தார். மருத்துவர்கள் யாரும் இல்லை. எனவே, நான் முதலுதவி அளித்தேன். ஓர் உயிரை காப்பாற்றியது மன நிறைவுதான். நான் இல்லாமல் போயிருந்தால் அவருடைய நிலைமை கொஞ்சம் சங்கடமாக இருந்திருக்கும். எனவே, விமானப் பணி பெண்களுக்கு முதலுதவி கொடுப்பதில் பயிற்சி கொடுக்க வேண்டும் என்பதே என் கருத்து” என்று தமிழிசை தெரிவித்தார்.

இதையும் படிங்க: பெண் குழந்தைகள் கண்ணாடிக்கு சமம்!ஆசிரியர்கள் கவனமாக கையாள வேண்டும்.! அழுத்தி பிடித்தால் உடைந்து விடும்-தமிழிசை

click me!