தற்காப்புக்காகத்தான் பிரதமர் மோடியின் பெயரை ஓ. பன்னீர்செல்வம் பயன்படுத்திக் கொள்கிறார் என்று அதிமுக அமைப்பு செயலாளரும் முன்னாள் அமைச்சருமான கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார்.
கோவில்பட்டியில் கடம்பூர் ராஜூ செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “சட்டப்பேரவைத் தேர்தலுக்காக திமுக கொடுத்த தேர்தல் வாக்குறுதிகள் எதையும் நிறைவேற்றவில்லை. ஸ்டாலின்தான் வராரு விடியல் தரப் போறாரு என்று சொன்னார்கள். ஆனால், தமிழகம் இருளில்தான் உள்ளது. தமிழகத்தில் மின் கட்டண உயர்வு மட்டுமல்ல அதிகரிக்கவில்லை. மின்வெட்டும் அதிகமாக உள்ளது. சம்சாரம் இல்லாமல் கூட இருக்கலாம். ஆனால், மின்சாரம் இல்லாமல் இருக்க முடியுமா? முடியாது. மின் கட்டண உயர்வால் பொதுமக்கள், தொழிற்துறையினர் மிகக் கடுமையாகப் பாதிக்கப் பட்டுள்ளனர்.
இதையும் படிங்க: அதிமுகவின் வங்கி கணக்குகளை முடக்குங்க... ஸ்ட்ரைட்டாக ஆர்பிஐக்கு கடிதம் எழுதிய ஓபிஎஸ்
எம்ஜிஆர் அதிமுகவை தொடங்கிய போது இருந்து எழுச்சி தற்போதும் உள்ளது. எங்களை பற்றி சொன்ன சசிகலா போன்றவர்கள் எல்லாம் இப்போது காணாமல் போய் விட்டார்கள். அதிமுக எம்பியை நீக்க கூடாது என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கருத்து தெரிவித்தால் எப்படி இருக்குமோ அப்படித்தான் சசிகலா கருத்தும் உள்ளது. அதிமுக பொதுக்குழு மற்றும் நீதிமன்றம் மூலமாக எடப்பாடி பழனிச்சாமி தலைமையில்தான் அதிமுக என்பது நிரூபமணமாகி உள்ளது. பாஜகவை பொறுத்தவரை அதிமுக உள் விவகாரங்களில் நாங்கள் தலையிட மாட்டோம் என்று தெளிவாக சொல்லிவிட்டது. பிரதமர் மோடி சொல்லிதான் அதிமுகவில் இணைந்ததாக ஓ. பன்னீர்செல்வம்தான் கூறிக்கொண்டிருக்கிறார்.
இதையும் படிங்க: ஓபிஎஸ் நீங்க அதிமுக தொண்டரா? வெட்கமா இல்லை.. ஓபிஎஸ்சை டாராக கிழித்த சி.வி சண்முகம்
ஆனால், பிரதமர் மோடி இதுபற்றி எதுவும் கூறவில்லை. எனவே தற்காப்புக்காகத்தான் பிரதமர் மோடியின் பெயரை ஓ. பன்னீர்செல்வம் பயன்படுத்திக் கொள்கிறார். பிரதமர் மோடியும் சரி, பாஜக தலைவர்களும் சரி, தற்போது வரை அதிமுக உட்கட்சி பிரச்னை குறித்து எதுவும் பேசியதில்லை. அதிமுகவின் உட்கட்சி விஷயங்களில் தலையிட மாட்டோம் என்று சொல்லிவிட்டார்களே. ஓபிஎஸ் தரப்பு அதிமுக கட்சி அலுவலகத்தில் இருந்த பொருட்களை கொள்ளை அடித்துள்ளனர். யார் உள்ளே சென்றார்கள் என்பது எல்லோருக்குமே தெரியும். இதுதொடர்பாகப் புகார் அளிக்கப்பட்டுள்ளது. காவல் துறை சட்டப்படி நடவடிக்கை எடுக்கும் என்று நாங்கள் நம்புகிறோம்” என்று கடம்பூர் ராஜூ தெரிவித்தார்.
இதையும் படிங்க: "எல்லாமே ரத்து.. அதிமுகவில் வாங்க சேர்ந்து செயல்படுவோம்"- ஓபிஎஸ் திடீர் பல்டி