ஜெயலலிதாவுக்கோ, உங்களை முதலமைச்சர் ஆக்கிய சசிகலாவிற்கோ, மக்களுக்கோ நீங்கள் உண்மையாக இல்லை. உங்கள் எஜமானர்கள் மோடி, அமித்ஷாவுக்கு மட்டுமே உண்மையாக இருக்கிறீர்கள் என எடப்பாடி பழனிசாமியை கடுமையாக விமர்சித்தார்.
எடப்பாடி பழனிசாமி அவர்களே 7 நாட்கள் ஷேவ் பண்ணாம இருந்தா எல்லாருக்கும்தான் மீசை வரும். பெரியார் மண்ணில் நின்று கொண்டு ஆண் பிள்ளையா? என்று கேட்கிறீர்கள் என உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார்.
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவனை ஆதரித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது, அவர் பேசுகையில்;- அமைச்சராக பொறுப்பேற்ற பின் முதன்முறையாக உங்களை சந்திக்க வந்திருக்கிறேன். கலைஞரின் பேரன், பெரியாரின் பேரனுக்கு வாக்கு கேட்டு வந்திருக்கின்றேன். கடந்த முறை 9,000 வாக்குகள் வித்தியாசத்தில் திருமகனை வெற்றி பெறச் செய்தீர்கள். இந்த முறை அவரது தந்தையை 50,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற செய்ய வேண்டும் என்றார்.
இதையும் படிங்க;- இபிஎஸ்யிடம் பணமும், திமிறும் உள்ளது.! கொள்ளையடிக்கும் கூட்டத்தின் தலைவனாக எடப்பாடி..! வைத்தியலிங்கம் ஆவேசம்
கடந்த 2 நாட்களுக்கு முன்பு எடப்பாடி பழனிசாமி மீசை வைத்த ஆம்பளயா, வேட்டி கட்டிய ஆண் பிள்ளையா என கேட்டார். 2016ம் ஆண்டு தலைமை செயலகத்தில் சிபிஐ சோதனை செய்தபோது, அவரது வாய்க்கு ஜிப்பாக அவரது மீசை மாறியது. கொடநாடு என்ற பேரைக் கேட்டாலே அவரது மீசை காதுகளை மூடிக்கொள்கிறது. தூத்துக்குடியில் அப்பாவிகள் 13 பேரின் கழுத்தை நெரிக்க கயிறாக அவரது மீசை இருந்தது. இரு பெண்களின் கால் செருப்பிற்கு பாலீஸ் போடும் பிரஸ்ஸாக அவரது மீசை இருந்தது. எந்த பயனும் இல்லாத அந்த மீசையைத்தான் தமிழக மக்கள் மழுங்கடித்தனர்.
இதையும் படிங்க;- நீங்கள் தவழ்ந்து சென்று கால்பிடித்த சசிகலா ஆம்பளயா? இபிஎஸ்ஐ வச்சு செய்த பிரபல இயக்குனர்..!
எடப்பாடி பழனிசாமி அவர்களே 7 நாட்கள் ஷேவ் பண்ணாம இருந்தா எல்லாருக்கும்தான் மீசை வரும். பெரியார் மண்ணில் நின்று கொண்டு ஆண் பிள்ளையா? என்று கேட்கிறீர்கள். தமிழ்நாடு மக்கள் எப்போதும் பாஜகவுக்கு வாய்ப்பு தர மாட்டார்கள். ஓபிஎஸ் எதாவது ஒரு மாநிலத்திற்கு ஆளுநராக நியமிக்கப்படுவார் இபிஎஸ் மாநில பாஜக தலைவராக விரைவில் நியமனம் செய்யப்படுவார் என கிண்டல் செய்தார். பாஜகவும், அதிமுகவும் சேர்ந்து கட்டிய எய்ம்ஸ் இது தான் என உதயநிதி ஒற்றை செங்கலை தூக்கி காண்பித்தார். அண்ணா ஆட்டுக்கு தாடியும், நாட்டுக்கு ஆளுநரும் தேவையில்லை என்றார். சட்டமன்றம் நிறைவேற்றிய 19 தீர்மானங்களை செயல்படுத்த விடாமல் ஆளுநர் இருக்கின்றார். அவங்க பிரச்சினைக்கு மோடிகிட்ட போனங்க, மக்கள் பிரச்சினைக்கு போயிருக்காங்களா? என கேள்வி எழுப்பினார்.
இதையும் படிங்க;- ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கு தடையா? சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கால் பரபரப்பு..!
அண்ணாவின் பெயரை கட்சியில் வைத்துக்கொண்டு அவரின் கொள்கைகளுக்கு எதிராக செயல்படுகிறீர்கள். ஜெயலலிதாவுக்கோ, உங்களை முதலமைச்சர் ஆக்கிய சசிகலாவிற்கோ, மக்களுக்கோ நீங்கள் உண்மையாக இல்லை. உங்கள் எஜமானர்கள் மோடி, அமித்ஷாவுக்கு மட்டுமே உண்மையாக இருக்கிறீர்கள் என எடப்பாடி பழனிசாமியை கடுமையாக விமர்சித்தார். நான் சட்டமன்றத்தில் சொன்னேன், கமலாலயம் சென்று விடாதீர்கள் என்று. எடப்பாடி பழனிச்சாமி வாய் திறக்கவில்லை. ஓபிஎஸ் மட்டுமே நாங்கள் கமலாலயம் செல்ல மாட்டோம் என சொன்னார். ஆனால் இன்று இருவரும் போட்டி போட்டுக் கொண்டு கமலாலயம் வாயிலில் நிற்கின்றனர் என விமர்சித்தார்.