தமிழக மாணவர்கள் மீது தாக்குதல்..! கைகட்டி வேடிக்கை பார்க்கும் பல்கலைக்கழக நிர்வாகம்- கே.பாலகிருஷ்ணன் ஆவேசம்

Published : Feb 21, 2023, 07:35 AM IST
தமிழக மாணவர்கள் மீது தாக்குதல்..! கைகட்டி வேடிக்கை பார்க்கும் பல்கலைக்கழக நிர்வாகம்- கே.பாலகிருஷ்ணன் ஆவேசம்

சுருக்கம்

பல்கலை கழகத்திற்குள் படிப்பதற்கும், பல்வேறு கருத்து பரிமாற்றங்கள் நடக்கவும் விவாதிக்கவும் உரிமை உள்ளது. ஆனால் ஏ‌.பி.வி.பி அதனை முடக்க முயல்கிறது. பல்கலை கழக நிர்வாகம் அதை கைகட்டி வேடிக்கை பார்க்கிறது. நிர்வாகத்தை நடத்துவதே ஏ.பி.வி.பி பரிவாரம்தானா? என கே.பாலகிருஷ்ணன் கேள்வி எழுப்பியுள்ளார்.

தமிழக மாணவர்கள் மீது தாக்குதல்

டில்லியில் உள்ள ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் தமிழக மாணவர்கள் மீது ஏபிவிபி அமைப்பினர் தாக்குதல் நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், தில்லியில் உள்ள ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில், ஏ.பி.வி.பி அமைப்பினர் கொலைவெறித் தாக்குதலில் தமிழ் நாட்டை சேர்ந்த மாணவர் நாசர் காயமுற்று மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். தந்தை பெரியார் படம் உள்ளிட்டு சேதமாக்கப் பட்டுள்ளது.காயமடைந்த மாணவரை ஆம்புலன்ஸ் வாகனத்தில் ஏறிய பிறகும் கூட மீண்டும் தாக்க முயன்றுள்ளார்கள் ஏ.பி.வி.பி அமைப்பினர். 

டெல்லி ஜே.என்.யூ பல்கலை.,யில் தமிழக மாணவர்கள் மீது தாக்குதல்... வைகோ கண்டனம்!!

கை கட்டி வேடிக்கை பார்க்கும் நிர்வாகம்

பல்கலை கழகத்திற்குள் படிப்பதற்கும், பல்வேறு கருத்து பரிமாற்றங்கள் நடக்கவும் விவாதிக்கவும் உரிமை உள்ளது. ஆனால் ஏ‌.பி.வி.பி அதனை முடக்க முயல்கிறது. பல்கலை கழக நிர்வாகம் அதை கைகட்டி வேடிக்கை பார்க்கிறது. நிர்வாகத்தை நடத்துவதே ஏ.பி.வி.பி பரிவாரம்தானா? என்ற கேள்விதான் எழுகிறது. இதற்கு முன்பும் கூட ஏ.பி.வி.பி அமைப்பினர், வெளியில் இருந்து குண்டர்களை அழைத்து மாணவர் தலைவர்‌கள் மேல் தாக்குதல் நடத்தியுள்ளனர். இப்போது‌ அந்த வன்முறையை  தமிழ்நாட்டு மாணவரை நோக்கி நடத்தியுள்ளனர். பல்கலை கழக நிர்வாகம் உடனடியாக செயல்பட்டு குற்றமிழைத்தவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். ஜே.என்.யூ பல்கலை கழகம் அனைவருக்குமான இடமாக ஜனநாயகத்துடன் இயங்குவதை உறுதி செய்திட வேண்டும் என கே.பாலகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார்.

இதையும் படியுங்கள்

தமிழக மாணவர் மீது ஏபிவிபி குண்டர்கள் கொலைவெறித் தாக்குதல்! இதுக்கு அமித்ஷா தான் பொறுப்பு! கொதிக்கும் திருமா.!

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

பாகிஸ்தானைப்போல துரோகிகள் அல்ல..! 1 சொட்டு தண்ணீருக்கு 100 ஆண்டு விசுவாசமாக இருப்போம்..! ரன்வீர் சிங்கால் பலூச் மக்கள் வேதனை..!
நான் கூட்டணியில் இருந்து வெளியேற அண்ணாமலை தான் காரணம்..? டிடிவி தினகரன் பரபரப்பு விளக்கம்