ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கு தடையா? சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கால் பரபரப்பு..!

By vinoth kumar  |  First Published Feb 21, 2023, 6:42 AM IST

தேர்தலின்போது வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதை தடுக்க பல்வேறு சட்டங்கள் உள்ளன. ஆனாலும் வாக்களர்களுக்கு பணம் விநியோகிப்பது தொடர்கிறது. இதனை தடுக்க தேர்தல் ஆணையம் போதுமான நடவடிக்கைகளை எடுப்பது இல்லை.


ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலுக்கு தடை விதிக்க கோரி கோவை மறுமலர்ச்சி மக்கள் இயக்க தலைவர் ஈஸ்வரன் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார். 

ஈரோடு கிழக்கு தொகுதி  இடைத்தேர்தல் வரும் 27ம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான தேர்தல் பிரசாரம் 25ம் தேதி மாலை நிறைவடைய உள்ளதால் அதிமுக, திமுக தலைவர் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். மறுபுறம் வாக்காளர்களை அடைத்து வைத்து ஆளுங்கட்சி பணம், பரிசு பொருட்கள், உணவு பொருட்கள் வழங்குவதாகவும், இதற்கு தேர்தல் ஆணையம் துணைபோவதாக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டி வருகிறார். 

Tap to resize

Latest Videos

இந்நிலையில், கோவை மறுமலர்ச்சி மக்கள் இயக்கத்தின் தலைவர் ஈஸ்வரன் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலுக்கு தடை விதிக்க கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார். அதில், தேர்தலின்போது வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதை தடுக்க பல்வேறு சட்டங்கள் உள்ளன. ஆனாலும் வாக்களர்களுக்கு பணம் விநியோகிப்பது தொடர்கிறது. இதனை தடுக்க தேர்தல் ஆணையம் போதுமான நடவடிக்கைகளை எடுப்பது இல்லை.

undefined

ஒவ்வொரு தேர்தலின் போதும், பணம் கொடுத்து வாக்கு வாங்கப்படுகிறது. இதுபோன்ற தவறிழைப்பவர்கள் தண்டிக்கப்படுவதில்லை. எனவே, தேர்தல் முறைகேடுகள் தொடர்பான வழக்குகளை விசாரிக்க உயர் நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில், வெளிமாநில ஐஏஎஸ் அதிகாரிகள், அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ அதிகாரிகள் கொண்ட குழு அமைக்க வேண்டும்.

இதுதொடர்பாக தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரிக்கு மனு அனுப்பினேன். ஆனால், அந்த மனுவுக்கு இதுவரை எந்த பதிலும் இல்லை. எனவே தேர்தல் முறைகேடு தொடர்பான வழக்குகளை விசாரிக்க உயர் நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் குழு அமைக்க உத்தரவிட வேண்டும். அதுவரை ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலை நடத்த தடை விதிக்க வேண்டும் என்று மனுவில் கோரியிருந்தார். இந்த மனு விரைவில் சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

click me!