சைலண்ட் மோடில் இபிஎஸ்.. ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் வேலையை ஆரம்பித்த ஓபிஎஸ்..!

By vinoth kumarFirst Published Jan 19, 2023, 8:15 AM IST
Highlights


ஈரோடு கிழக்கு தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏ ஈவெரா திருமகன் மாரடைப்பு ஏற்பட்டு கடந்த ஜனவரி 4ம் தேதி காலமானார். இதனையடுத்து, அந்த தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், 3 மாநில சட்டப்பேரவை தேர்தலுடன் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது.

ஈரோடு கிழக்கு தொகுதிக்கு இடைத்தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நிலையில் சென்னையில் வரும் 23ம் தேதி ஓபிஎஸ் தரப்பு மாவட்ட செயலாளர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது.

ஈரோடு கிழக்கு தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏ ஈவெரா திருமகன் மாரடைப்பு ஏற்பட்டு கடந்த ஜனவரி 4ம் தேதி காலமானார். இதனையடுத்து, அந்த தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், 3 மாநில சட்டப்பேரவை தேர்தலுடன் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது. பிப்ரவரி 27ம் தேதி வாக்குப்பதிவும், வாக்கு எண்ணிக்கை மார்ச் 2ம் தேதியும் நடைபெற உள்ளது.  தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதை அடுத்து தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்தது. இதனையடுத்து, பாஜக, திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் தேர்தல் பணிகளை தொடங்கி விட்டனர். 

இதையும் படிங்க;- ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் பாஜக போட்டி? முக்கிய அறிவிப்பை வெளியிட்டு அதிமுகவுக்கு அதிர்ச்சி கொடுத்த அண்ணாமலை

இந்நிலையில், எடப்பாடி பழனிசாமி தரப்பினர் வேட்பாளர் அறிவிப்பு தொடர்பாக மவுனம் காத்து வரும் நிலையில், ஓ.பன்னீர்செல்வம் தரப்பு வரும் 23ம் தேதி மாவட்ட செயலாளர் கூட்டத்தை நடத்துகின்றனர். இக்கூட்டத்தில் ஈரோடு கிழக்கு தொகுதி தேர்தல் தொடர்பாகவும், கட்சி ரீதியாக அடுத்தக்கட்ட நகர்வுகள் குறித்து விவாதிக்க பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

இதையும் படிங்க;-  ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்.! முடங்குகிறது இரட்டை இலை.! அதிர்ச்சியில் இபிஎஸ்.! குஷியில் ஓபிஎஸ்

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அதிமுகவில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் இணைந்து பி விண்ணப்பத்தில் கையெழுத்து போடவில்லை என்றால் இரட்டை இலை சின்னம் முடக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளதால் எடப்பாடி பழனிசாமி என்ன செய்வது என்று புரியாமல் குழப்பத்தில் இருந்து வருகிறார். அதேநேரத்தில் அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்கின் தீர்ப்பை உச்சநீதிமன்றம் விரைவில் வெளியிடும் பட்சத்தில் இரட்டை இலை ஓபிஎஸ்க்கா, இபிஎஸ்க்கா என்பதும் தெரியவரும். 

click me!