இரட்டை இலை சின்னத்தின் உரிமையாளர் ஓ.பன்னீர்செல்வம்... ஓபிஎஸ் ஆதரவாளர் பரபரப்பு கருத்து!!

By Narendran SFirst Published Jan 18, 2023, 11:59 PM IST
Highlights

இரட்டை இலை சின்னத்தின் உரிமையாளர் ஓ.பன்னீர்செல்வம் என்றும் அந்த சின்னத்தை யாரும் உரிமை கொண்டாட முடியாது என்றும் ஓபிஎஸ் ஆதரவாளர் புகழேந்தி தெரிவித்துள்ளார்.  

இரட்டை இலை சின்னத்தின் உரிமையாளர் ஓ.பன்னீர்செல்வம் என்றும் அந்த சின்னத்தை யாரும் உரிமை கொண்டாட முடியாது என்றும் ஓபிஎஸ் ஆதரவாளர் புகழேந்தி தெரிவித்துள்ளார். முன்னதாக ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்த திருமகன் ஈவெரா, உடல்நலக்குறைவால் கடந்த சில நாட்களுக்கு முன் உயிரிழந்தார். இதை அடுத்து அந்த தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் தேதியை தேர்தல் ஆணையம் இன்று அறிவித்தது. அதை தொடர்ந்து அங்கு தேர்தல் நடத்தல் விதிமுறைகள் அமலுக்கு வந்தன.

இதையும் படிங்க: தேசிய கட்சிகளில் அதிக வருமானம் பெற்ற கட்சி பாஜக.. திமுகவும் லிஸ்ட்ல இருக்கு! எத்தனையாவது இடம் தெரியுமா?

இதற்கிடையே இரட்டை இலை சின்னத்தின் உரிமையாளர் ஓ.பன்னீர்செல்வம் என்றும் அந்த சின்னத்தை யாரும் உரிமை கொண்டாட முடியாது என்றும் ஓபிஎஸ் ஆதரவாளர் புகழேந்தி தெரிவித்துள்ளார். இதுக்குறித்து பேசிய அவர், ஓபிஎஸ் உத்தரவிட்டால் இரட்டை இலையில் நிற்ப்போம். ஜெயலலிதாவால் அடையாளம் காட்டப்பட்ட ஓபிஎஸ் இல்லாமல் எந்த தேர்தலிலும் அதிமுகவால் வெற்றிப்பெற முடியாது. எடப்பாடி பழனிசாமிக்கு சரித்திரம் கிடையாது. இரட்டை இலை எங்கள் சின்னம். அதன் உரிமையாளர் ஓ.பன்னீர்செல்வம். எனவே அந்த சின்னத்தை யாரும் உரிமை கொண்டாட முடியாது.

இதையும் படிங்க: ரஃபேல் வாட்ச் மன்னன்! ஈரோடு தேர்தல் - சவாலுக்கு நீங்கள் தயாரா அண்ணாமலை? வெளுத்து வாங்கிய காயத்ரி ரகுராம்!

தற்போது உச்ச நீதிமன்றத்தில் இருக்கும் வழக்கு எடப்பாடி பழனிச்சாமி இடைக்கால பொதுச்செயலாளர் எனக் கூறுவது தொடர்பான வழக்கு தான். அந்த வழக்குக்கும் சின்னத்துக்கும் தொடர்பு இல்லை. அதிமுக சின்னம் தொடர்பான வழக்கு எங்கேயுமே இல்லை. அதிமுக சின்னத்தை பொருத்தவரை ஓ.பன்னீர்செல்வத்துக்கு சாதகமாக தான் தீர்ப்பு இருக்கிறது. தேர்தல் ஆணையம் இரட்டை இலை சின்னத்தின் உரிமையாளராக ஓ.பன்னீர்செல்வத்தை தான் அங்கீகரித்து இருக்கிறது என்று தெரிவித்தார். 

click me!