முன்னாள் காங்கிரஸ் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவனின் மகனும், ஈரோடு கிழக்கு தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏவுமான ஈவெரா திருமகன் உடல்நலக்குறைவால் கடந்த ஜனவரி 4ம் தேதி காலமானார். இதனையடுத்து, ஈரோடு கிழக்கு தொகுதி காலியாகிவிட்டதாக சட்டப்பேரவை செயலாளர் அறிவித்தார்.
ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற இடைத்தேர்தலை எதிர்கொள்ள 14 பேர் கொண்ட தேர்தல் பணி குழுவை தமிழக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை அறிவித்துள்ளார்.
முன்னாள் காங்கிரஸ் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவனின் மகனும், ஈரோடு கிழக்கு தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏவுமான ஈவெரா திருமகன் உடல்நலக்குறைவால் கடந்த ஜனவரி 4ம் தேதி காலமானார். இதனையடுத்து, ஈரோடு கிழக்கு தொகுதி காலியாகிவிட்டதாக சட்டப்பேரவை செயலாளர் அறிவித்தார். இதனால், எந்த நேரத்திலும் இடைத்தேர்தல் தேதி அறிவிக்கப்படலாம் என்ற தகவல் வெளியானது. அதன்படி , ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் பிப்ரவரி 27ம் தேதி வாக்குப்பதிவும், வாக்கு எண்ணிக்கை மார்ச் 2ம் தேதியும் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், பாஜக சார்பில் 14 பேர் கொண்ட தேர்தல் பணிக்குழுவை அண்ணாமலை அறிவித்துள்ளார்.
undefined
இதையும் படிங்க;- ஈரோடு கிழக்கு தொகுதி தேர்தல் எதிரொலி... அமலுக்கு வந்தது தேர்தல் நடத்தை விதிமுறைகள்!!
இதுதொடர்பாக தமிழக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில்;- தமிழகத்தில் ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கு இடைத்தேர்தலானது வருகின்ற பிப்ரவரி27ம் தேதி அன்று நடைபெற உள்ளது. தேர்தல் பணிகளை முழுமையாக கவனிக்கவும் ஒருங்கிணைக்கவும் மாநில அளவில் குழு அமைக்கப்படுகிறது.
மாநில அளவிலான குழு
வேதானந்தம், சரஸ்வதி, என்.பி. பழனிசாமி, சிவசுப்ரமணியம், செந்தில், சிவகாமி மகேஸ்வரன், பொன்.ராஜேஷ் குமார், விவேகானந்தன், விஸ்வா பாலாஜி, விநாயக மூர்த்தி, தங்கராஜ், ஆற்றல் அசோக் குமார், புனிதம் ஐயப்பன், ரஞ்சித் ஆகியோரை பாஜக மாநில தலைவர் அண்ணாமலை நியமித்துள்ளார்.
இதையும் படிங்க;- ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கு வருகின்ற பிப்.27ல் இடைத்தேர்தல்
அதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள பாஜக முதல் ஆளாக தேர்தல் பணிக்குழுவை அமைத்துள்ளது. இதனால் ஈரோடு கிழக்கு தொகுதியில் பாஜக களமிறங்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.