முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் நினைவுநாளையொட்டி டிசம்பர் மாதம் 5 ஆம் தேதி அவரது நினைவிடத்தில் அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மலர் தூவி மரியாதை செலுத்த இருப்பதாக அதிமுக அறிவித்துள்ளது.
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் மரணம் தொடர்பாக சர்ச்சை எழுந்த நிலையில் ஆறுமுகசாமி ஆணையம் விசாரித்து அறிக்கை தாக்கல் செய்தது. அந்த அறிக்கையில், மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா டிசம்பர் 5ஆம் தேதி நள்ளிரவு 11.30 மணிக்கு மரணித்துவிட்டதாக கூறப்பட்டது. இந்த நிலையில், ஜெயலலிதா 2016ஆம் ஆண்டு டிசம்பர் 5ஆம் தேதி மரணிக்கவில்லை, டிசம்பர் 4ஆம் தேதி மாலை 3.30 மணிக்கு மரணித்துவிட்டார் என்று ஆறுமுகசாமி ஆணையத்தில் கூறப்பட்டுள்ளது. இதனால் எந்த தினத்தில் நினைவு நாள் அனுசரிக்கப்படும் என்ற கேள்வி எழுந்திருந்தது. இந்தநிலையில் ஜெயலலிதா நினைவு தினம் தொடர்பாக அதிமுக வெளியிட்டுள்ள அறிக்கையில்,
பாஜக மாநில தலைவர் அண்ணாமலைக்கு என்ன ஆச்சு.. டுவிட்டர் பதிவால் தொண்டர்கள் அதிர்ச்சி..!
தமிழக மக்கள் அனைவரது இதயங்களிலும் நிரந்தரமாக வீற்றிருக்கும் கழகப் பொதுச் செயலாளர், தமிழ் நாடு முன்னாள் முதலமைச்சர், இதய தெய்வம் புரட்சித் தலைவி அம்மா அவர்கள் நம்மையெல்லாம் ஆற்றொணாத் துயரத்தில் ஆழ்த்திவிட்டு அமரர் ஆகிய நாள் 5.12.2016 காலத்தால் அழியாத புரட்சிகரமான திட்டங்களால் தமிழ் நாட்டு மக்களின் வாழ்க்கையில் பெரும் மாற்றங்களையும், எழுச்சியையும் ஏற்படுத்திய புரட்சித் தலைவி அம்மா அவர்களின் புகழ் காலமெல்லாம் நிலைத்திருக்கும். தன்னலம் கருதாது, தமிழ் நாட்டு மக்களுக்காக தன் அறிவையும், உழைப்பையும் அர்ப்பணித்துப் பாடுபட்ட நம் அன்பு அம்மா அவர்களுக்கு புகழ் அஞ்சலி செலுத்துவது ஒவ்வொரு கழகத்தினரின் இன்றியமையாத கடமையாகும்.
இதய தெய்வம் புரட்சித் தலைவி அம்மா அவர்களின் 6-ஆம் ஆண்டு நினைவு நாளான 5.12.2022 - திங்கட் கிழமை காலை 10.00 மணியளவில், சென்னை, மெரினா கடற்கரையில் அமைந்துள்ள புரட்சித் தலைவி அம்மா அவர்களுடைய நினைவிடத்தில், கழக இடைக்காலப் பொதுச் செயலாளர், மாண்புமிகு சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர், தமிழ் நாடு முன்னாள் முதலமைச்சர் திரு. எடப்பாடி K. பழனிசாமி அவர்கள் மலர் தூவி மரியாதை செலுத்த உள்ளார். தொடர்ந்து, தலைமைக் கழக நிர்வாகிகள், மாவட்டக் கழகச் செயலாளர்கள், முன்னாள் அமைச்சர்கள், கழக நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், முன்னாள் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டோர் மரியாதை செலுத்த உள்ளனர்.
அதனைத் தொடர்ந்து, புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர்., புரட்சித் தலைவி அம்மா ஆகியோரின் நினைவிட வளாகத்தில் திறந்த மேடை அமைத்து உறுதிமொழிகள் மேற்கொள்ளவும் உள்ளனர். இந்நிகழ்ச்சிகளில், மாவட்டக் கழக நிர்வாகிகள், கழக சார்பு அணிகளின் நிர்வாகிகள், கழகத்தில் பல்வேறு நிலைகளில் உள்ள பொறுப்பாளர்கள் மற்றும் தொண்டர்கள் உள்ளிட்ட பொதுமக்களும் கலந்துகொண்டு மாண்புமிகு அம்மா அவர்களுக்கு மரியாதை செலுத்துமாறு கேட்டுக்கொள்கிறோம். மாண்புமிகு அம்மா அவர்களின் நினைவு நாளான 5.12.2022 அன்று, புரட்சித் தலைவி அம்மா அவர்களைப் பற்றிய நினைவுகளை நெஞ்சில் சுமந்துள்ள, மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூராட்சி, கிளை, வார்டு; மாநகராட்சிப் பகுதி, வட்ட அளவில், கழகத்தில் பல்வேறு நிலைகளில் பணியாற்றி வரும் நிர்வாகிகள் மற்றும் கழக உடன்பிறப்புகள் அனைவரும் மன ஆறுதல் பெறும் வகையில்,
அனைத்துப் பகுதிகளிலும் ஆங்காங்கே புரட்சித் தலைவி அம்மா அவர்களின் திருஉருவப் படங்களை வைத்து, மாலை அணிவித்து அஞ்சலி செலுத்துமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இதற்கான ஏற்பாடுகளை சம்பந்தப்பட்ட மாவட்டக் கழகச் செயலாளர்கள் செய்திட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம். மேலும், கழக அமைப்புகள் செயல்பட்டுக் கொண்டிருக்கும் புதுச்சேரி, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா, மகாராஷ்டிரா, கேரளா, புதுடெல்லி, அந்தமான் உள்ளிட்ட பிற மாநிலங்களிலும், 5.12.2022 அன்று ஆங்காங்கே புரட்சித் தலைவி அம்மா அவர்களின் திருஉருவப் படங்களை வைத்து, மலர் அஞ்சலி செலுத்துமாறு கேட்டுக்கொள்வதாக அதிமுக சார்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படியுங்கள்
அன்று எதிர்ப்பு..! இன்று கட்டாயமா..? மக்களை துன்புறுத்தும் திமுக அரசு..! இறங்கி அடிக்கும் ஓபிஎஸ்