ராஜீவ் கொலை வழக்கில் விடுதலையான ஆறு பேருக்கு எதிராக மறு சீராய்வு மனு தாக்கல் செய்வது பச்சை துரோகம் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.
ராஜீவ் கொலை வழக்கில் விடுதலையான ஆறு பேருக்கு எதிராக மறு சீராய்வு மனு தாக்கல் செய்வது பச்சை துரோகம் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். இதுக்குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழர் வரலாற்றில் ஈடு இணையற்ற மாவீரராக பிரபாகரன் திகழ்கிறார்.
இதையும் படிங்க: திமுக அரசை விமர்சிக்க எதுவும் இல்லாததால் பொய் வதந்தி பரப்புகிறது... பாஜக மீது மனோ தங்கராஜ் குற்றச்சாட்டு!!
தன் நெஞ்சில் வைத்து பூஜிக்கின்ற தலைவராக இருக்கிறார். ஈழப்போர் நடந்தபோது இருந்த இந்தியா போன்று தற்போதும் மத்திய அரசு தமிழக மக்களுக்கு துரோகம் செய்து வருகிறார். ஒரே லட்சியம் தமிழீழம் அமைவது மட்டும்தான். தமிழக ஆளுநர் அரசியல் சட்டத்திற்கு விரோதமாக செயல்படுகிறார். பாஜகவின் ஊது குழலாக செயல்படுகிறார்.
இதையும் படிங்க: பெரம்பலூரில் நவ.28, 29ம் தேதிகளில் டிரோன்கள் பறக்க தடை... காரணம் இதுதான்!!
ராஜீவ் கொலை வழக்கில் விடுதலையான ஆறு பேருக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மறு சீராய்வு மனு தாக்கல் செய்வது பச்சை துரோகம் என்று தெரிவித்துள்ளார். தமிழக அரசுக்கும் ஆளுநருக்கும் இடையே கருத்து வேறுபாடு இருக்கும் நிலையில் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் ஆளுநரை விமர்சித்து வருகின்றனர். அந்த வகையில் வைகோவும் தற்போது ஆளுநரை விமர்சித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.