அதிமுகவில் புதிய உறுப்பினர் சேர்க்கை, ஏற்கனவே உள்ளவர்கள் புதுப்பித்துக் கொள்வதற்கான பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை தலைமை அலுவலகத்தில் ஒப்படைப்பதற்கு இன்று கடைசி நாளாகும். இந்தநிலையில் இதுவரை ஒரு கோடியே 72 லட்சம் உறுப்பினர்கள் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளதாக எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
அதிமுகவில் இரண்டு கோடி புதிய உறுப்பினர்கள்?
ஜெயலலிதா மறைவிற்கு பிறகு அதிமுகவில் ஏற்பட்ட அதிகார போட்டியானது இன்னும் தொடர்ந்து கொண்டு வருகிறது. இந்தநிலையில் சட்ட போராட்டத்தின் மூலம் எடப்பாடி பழனிசாமி அதிமுக பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டார். இதனையடுத்து அதிமுகவை மீண்டும் வலுப்படுத்தும் நடவடிக்கையில் எடப்பாடி களம் இறங்கினார். இதன் முதல் கட்டமாக அதிமுகவில் இரண்டு கோடி உறுப்பினர்களை சேர்க்க வேண்டும் என இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, ஏற்கனவே உள்ள உறுப்பினர்கள் தங்கள் பதிவை புதுப்பித்துக்கொள்வதற்கும்,
undefined
புதிய உறுப்பினர்களை சேர்ப்பதற்குமான விண்ணப்ப படிவம் விநியோகத்தை கடந்த ஏப்ரல் மாதம் ஐந்தாம் தேதி அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தொடங்கி வைத்தார். அன்று முதல் உறுப்பினர் சேர்ப்பு பணியில் மாவட்ட செயலாளர்கள் தீவிரமாக ஈடுப்பட்டு வருகின்றனர். அதை தொடர்ந்து உறுபினர் சேர்ப்பு பணிக்கான காலக்கெடுவை நீட்டிக்க வேண்டும் என மாவட்ட செயலாளர்கள் கேட்டுக்கொண்டதற்கு இணங்க, ஜூலை 19 ஆம் தேதி மாலை 5 மணி வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டது.
அதன்படி தமிழகம், புதுச்சேரி, ஆந்திரா, கர்நாடகா, அந்தமான், உள்ளிட்ட மாநிலங்களில் உள்ள மாநில, மாவட்ட, பகுதி, வட்ட கழக நிர்வாகிகள் தங்களது மாவட்டங்கள் மாநிலங்களுக்கு உட்பட்ட அதிமுக உறுப்பினர் சேர்க்கை படிவங்களை பூர்த்தி செய்து இன்று மாலைக்குள் தலைமை அலுவலகத்தில் இன்று ஒப்படைக்கவுள்ளனர். புதிய உறுப்பினர் அட்டை பெற்றவர்கள் மட்டுமே கட்சியில் பதவிகள் பெறுவதற்கும், கட்சி அமைப்பு தேர்தல்களில் போட்டியிடுவதற்கும், வாக்கப்பளிப்பதற்கும் தகுதியுடையவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தநிலையில் இன்று காலை டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த எடப்பாடி பழனிசாமி, அதிமுகவில் இதுவரை 1 கோடியே 72 லட்சம் உறுப்பினர்கள் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
இதையும் படியுங்கள்
தமிழகத்தில் அதிமுக தலைமையில் தான் கூட்டணி.! 330 தொகுதிகளில் வெற்றி- அடித்து கூறிய இபிஎஸ்