கடந்த 2016-ம் ஆண்டு தமிழக சட்டமன்ற பொதுத்தேர்தலில் ஆவடி சட்டமன்ற தொகுதியில் அதிமுக வேட்பாளராக மாஃபா பாண்டியராஜன் போட்டியிட்டார். இவரை எதிர்த்து திமுக சார்பில் ஆவடி நாசர் போட்டியிட்டார். இந்த தேர்தலில் 1,395 வாக்குகள் வித்தியாசத்தில் மாஃபா பாண்டியராஜன் வெற்றி பெற்றார்.
அதிமுக முன்னாள் அமைச்சர் மாஃபா பாண்டியராஜனுக்கு வெற்றியை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு வழங்கியுள்ளது.
கடந்த 2016-ம் ஆண்டு தமிழக சட்டமன்ற பொதுத்தேர்தலில் ஆவடி சட்டமன்ற தொகுதியில் அதிமுக வேட்பாளராக போட்டியிட்டார். இவரை எதிர்த்து திமுக சார்பில் ஆவடி நாசர் போட்டியிட்டார். இந்த தேர்தலில் 1,395 வாக்குகள் வித்தியாசத்தில் மாஃபா பாண்டியராஜன் வெற்றி பெற்றார்.
இதையும் படிங்க;- செந்தில்பாலாஜி வீட்டில் ரெய்டு.! இனிப்பு கொடுத்த கொண்டாடிய தமிழக அமைச்சர்கள்.? - ஜெயக்குமார்
இவரது வெற்றியை எதிர்த்து ஆவடி நாசர் 2016-ம் ஆண்டில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு நீதிபதி ஆர்.சுப்ரமணியன் முன் விசாரணைக்கு வந்தபோது, முன்னாள் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் இரண்டு நாட்கள் நேரில் ஆஜராகி சாட்சியம் அளித்தார். அவரிடம் திமுக வேட்பாளர் ஆவடி நாசர் தரப்பில் குறுக்கு விசாரணை செய்யப்பட்டது.
இதையும் படிங்க;- அனிதா வயதுடைய மாணவி தான் விஷ்ணுபிரியா.. ஸ்டாலினுக்கு உறுத்தவில்லையா? கொதிக்கும் ஷியாம் கிருஷ்ணசாமி.!
அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில் வழக்கின் தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் தள்ளி வைக்கபட்டிருந்தது. இந்நிலையில், இவ்வழக்கின் தீர்ப்பு நேற்று வெளியானது. அதில், குற்றச்சாட்டுகளுக்கு போதிய ஆதாரம் இல்லாததால் ஆவடி நாசர் தொடர்ந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது. இதனையடுத்து, மாஃபா.பாண்டியராஜன் பெற்ற வெற்றி செல்லும் என உத்தரவிட்டார்.