“வெளிநாடு செல்வதால் முதலீடுகள் வராது..” முதல்வர் மு.க ஸ்டாலினை தாக்கி பேசிய ஆளுநர் ஆர்.என்.ரவி

By Raghupati R  |  First Published Jun 5, 2023, 11:15 PM IST

வெளிநாடு செல்வதால் முதலீடுகள் வராது என்று தமிழக முதல்வர் மு.க ஸ்டாலினை மறைமுகமாக தாக்கி பேசியுள்ளார் ஆளுநர் ஆர்.என்.ரவி.


சென்னையில் 2024 ஜனவரி மாதம் நடைபெறவுள்ள உலக முதலீட்டாளர்கள் மாநாட்டிற்கு அழைப்பு விடுக்கும் வகையிலும், தமிழ்நாட்டிற்கு முதலீடுகளை ஈர்க்கும் நோக்கிலும் சிங்கப்பூர் மற்றும் ஜப்பான் நாடுகளுக்கு அரசு முறைப் பயணம் மேற்கொண்டார் முதல்வர் மு.க ஸ்டாலின்.

தற்போது முதல்வரின் வெளிநாட்டு பயணத்தை தாக்கி பேசியுள்ளார் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி. உதகையில் நடைபெற்ற பல்கலைக்கழக துணை வேந்தர்கள் மாநாட்டில் உரையாற்றிய ஆளுநர் ஆர்.என்.ரவி, “நாம் கேட்பதாலோ, நேரில் சென்று தொழிலதிபர்களுடன் பேசுவதாலோ முதலீடுகள் வராது. உலகளாவிய பெரும் தொழில் அமைப்புகளுக்கான சிறந்த சூழலை உருவாக்க வேண்டும்.

Tap to resize

Latest Videos

இதையும் படிங்க..ஒடிசா ரயில் சோகத்திற்கு ‘முக்கிய’ காரணம் இதுதான்.! ரயில்வே ஊழியர்கள் சொன்ன அதிர்ச்சி தகவல் | முழு பின்னணி

அறிவியலையும், தொழில்நுட்பத்தையும் கற்க ஆங்கிலம் முக்கியம் என்ற நம்பிக்கை நம் ஆழ்மனதில் பதியும் அளவிற்கு ஆங்கிலத்திற்கு நாம் அடிமையாகிவிட்டோம். இந்த எண்ணம் அடியோடு மாற வேண்டும்.  இளைஞர்களுக்காக அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பாடங்களை தமிழில் மொழிபெயர்த்து வழங்கினால் இளைஞர்களின் தடுமாற்றத்தை முறியடிக்கலாம். தமிழில் வழங்கும் கல்வி மனித ஆற்றலுக்கு பெரும் ஊக்கத்தை அளிக்கும்.

படிப்பிற்கு ஏற்ற வேலையில்லை. தமிழகத்தில் காலத்திற்கேற்ப கல்விமுறையை  மாற்ற வேண்டும். கல்வி முறையை இளைஞர்களின் திறன் காலத்திற்கு ஏற்ப மாற்ற வேண்டும். தேசிய கல்விக் கொள்கை இளைஞர்களின் திறனை அதிகரிக்கும். பிற மாநிலங்கள் தமிழகத்துடன் போட்டி போடும் அளவிற்கு முன்னேறியுள்ளன. திறன் படைத்த இளைஞர்களை உருவாக்க கல்வியில் மாற்றம் தேவை. 

திறன்வாய்ந்த மனித வளத்தை உருவாக்கினால் மட்டுமே அந்நிய முதலீடுகளை கவர முடியும். தொழில்நுட்ப நூல்கள் தாய் மொழியில் மொழி பெயர்க்கப்பட்டால் மாணவர்கள் பயன்பெறுவர். புதிய கல்விக்கொள்கை இளைஞர்களின் திறனை அதிகரிக்கும்" என்று கூறினார். தமிழக ஆளுநர் ஆர்.என் ரவி முதல்வர் ஸ்டாலினின் வெளிநாட்டு பயணத்தை மறைமுகமாக தாக்கி பேசியுள்ளது அரசியல் வட்டாரங்களில் சலசலப்பை உண்டாக்கி உள்ளது.

இதையும் படிங்க..பெருமாள் கோவிலில் சிக்கன் பிரியாணி சாப்பிடுவதா? அன்று தஞ்சாவூர்! இன்று சென்னையா? கொதிக்கும் ஆர்வலர்கள்

click me!