நாடாளுமன்ற தேர்தலையொட்டி அதிமுக பொதுச்செயலாளர் இன்று முதல் பிரச்சாரம் மேற்கொள்ளவுள்ளார். முன்னதாக சேலம் மாவட்டம் நங்கவள்ளி அருகே உள்ள அருள்மிகு சென்றாய பெருமாள் கோவிலில் சுவாமி தரிசனம் செய்து அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரத்தை தொடங்கினார்.
சூடு பிடிக்கும் அரசியல் களம்
நாடாளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்தலுக்கு இன்னும் 25 நாட்கள் மட்டுமே உள்ளது. இதனையடுத்து அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளை தீவிரம் காட்டி வருகிறது. அந்த வகையில் திமுக தலைவரும், தமிழக முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தனது பிரச்சாரத்தை திருச்சியில் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு தொடங்கினார். இதனையடுத்து ஒவ்வொரு நாளும் ஒரு மாவட்டத்தில் தனது பிரச்சார பொதுக்கூட்டத்தை நடத்தி வருகிறார். அந்த வகையில் திமுகவிற்கு போட்டியாக களம் இறங்கியுள்ள அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியும் இன்று தனது பிரச்சார பயணத்தை தொடங்கியுள்ளார்.
கோயிலில் எடப்பாடி சாமி தரிசனம்
இன்று திருச்சியில் அதிமுக வேட்பாளர்கள் மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து திருச்சியில் தேர்தல் பிரச்சாரத்தை துவக்க உள்ளார் முன்னதாக சேலம் மாவட்டம் நங்கவள்ளி அருகே உள்ள அருள்மிகு சென்றாய பெருமாள் கோவிலில் சுவாமி தரிசனம் செய்தார். தேர்தல் பிரச்சாரத்திற்கு முன்பாக இக்கோவிலில் சுவாமி தரிசனம் செய்தால் தேர்தலில் வெற்றி பெற அதிக வாய்ப்பு உள்ளதாகவும் அதிர்ஷ்டமானதாகவும் கருதி ஒவ்வொரு தேர்தல் நேரத்திலும் இக்கோவிலில் தரிசனம் செய்த பின்பு தான் பிரச்சாரத்தை துவங்குவார்.
பிரச்சார களத்தில் எடப்பாடி
அதன் படி, இன்று காலை கோயிலில் சாமி தரிசனத்திற்கு பிறகு கள்ளக்குறிச்சி வேட்பாளர் மற்றும் சேலம் வேட்பாளரை ஆதரித்து பிரச்சாரத்தை தொடங்கினார். இதனையடுத்து இன்று மாலை திருச்சியில் அதிமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை அனைவரையும் அறிமுகம் செய்து வைத்து தனது பிரச்சாரத்தை தொடங்கவுள்ளார். அதன்படி, இன்று மார்ச் 24-ம் தேதி ஞாயிறு மாலை 4 மணிக்கு திருச்சி நவலூர் குட்டப்பட்டு வண்ணாங்கோவில் பகுதியில் தனது பரப்புரையை ஆரம்பிக்கிறார்.
தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம்
மார்ச் 26-ம் தேதி மாலை 4 மணிக்கு தூத்துக்குடி விவிடி சிக்னல், எம்ஜிஆர் திடலிலும், இரவு 7 மணிக்கு திருநெல்வேலியில் உள்ள வாகையாடிமுனையிலும் பரப்புரை செய்கிறார். மார்ச் 27-ம் தேதி மாலை 4 மணிக்கு கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் உள்ள நாகராஜா கோயில் திடலிலும், இரவு 7 மணிக்குத் தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் உள்ள 18-ம் படி கருப்பசாமி கோயில் அருகிலும் பரப்புரை மேற்கொள்கிறார். இது போல தமிழகம் முழுவதும் தனது பிரச்சார பயணத்தை எடப்பாடி பழனிசாமி தீவிரப்படுத்தவுள்ளார்.
இதையும் படியுங்கள்