அதிமுக வேட்பாளர் பட்டியல் வெளியீடு
நாடாளுமன்ற தேர்தலையொட்டி அதிமுக சார்பாக வேட்பாளர் பட்டியில் வெளியிடப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து அதிமுக தேர்தல் அறிக்கையை அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். இந்த தேர்தல் அறிக்கையில், 133 வாக்குறுதிகள் இடம்பெற்றுள்ளது. அதில் உள்ள மக்கிய அம்சங்கள் இதோ..
- மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையை பயன்பாட்டிற்கு கொண்டுவர மத்திய அரசு துரித நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- கோயம்புத்தூரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க வேண்டும்
- மகளிர்க்கு மாதம் 3000 வழங்க மத்திய அரசிடம் வலியுறுத்தப்படும்
- சென்னை மெட்ரோ ரயிலை செங்கல்பட்டு வரை நீட்டிக்க வலியுறுத்தப்படும்
- கிளாம்பாக்கத்தில் இருந்து ஒரகடம் வரை மெட்ரோ ரயில் இயக்க வலியுறுத்துவோம்
- ராமநாதபுரத்தில் விமான நிலைய அமைக்க வலியுறுத்துவோம்
இலவச எரிவாயு உருளை
-
மத்திய அரசு அறிவித்த ஓசூர் விமான நிலையத்தில் விரைந்து முடித்திட வலியுறுத்துவோம்
-
நாகை திருவாரூர் உள்ளடக்கிய ஒரு இடத்தில் விமான நிலையம் அமைக்க வலியுறுத்துவோம்
- உச்சநீதிமன்ற கிளையை சென்னையில் அமைக்க வலியுறுத்தப்படும்
- ஆளுநர் பதவி நியமிக்கும் போது மாநில அரசின் கருத்துகளை கேட்க வேண்டும்
- நாடாளுமன்ற குடிகாரக் கூட்டத்தொகை சென்னையில் நடத்த வேண்டும்
- முல்லைப் பெரியாறு அணை பிரச்சனைக்கு தீர்வு காணப்பட வேண்டும்
- நீட்டுக்கு பதிலாக மாற்றுத் தேர்வு முறை தேவை
- நெடுஞ்சாலை சுங்கசாவடிகளை அகற்ற வேண்டும்
-
வழக்காடு மொழியாக தமிழ் இடம்பெற வேண்டும்
- ரயில் பயணங்களில் மூத்த குடிமக்களுக்கு 50% கட்டண சலுகை அளிக்கப்பட்டு வந்தது தற்போது அது நிறுத்தப்பட்டுள்ளது மீண்டும் சலுகை வழங்கிட வேண்டும்
- நெகிழிப் பொருட்களுக்கு நிரந்தரமாக தடை விதிக்க வேண்டும்
- விவசாயிகளுக்கு ஓய்வூதியமாக மாதம் 5 ஆயிரம் வழங்கும் திட்டத்தை விவசாயிகளின் நலன் கருதி மத்திய அரசு செயல்படுத்த வேண்டும்
- குடும்ப அட்டையில் உள்ள அனைவருக்கும் ஆண்டுக்கு 6 எரிவாயு உருளைகள் விலை இல்லாமல் அளிக்க வேண்டும்
- குடியுரிமை திருத்த சட்டம் அரசின் நடவடிக்கை பாரபட்சம் இல்லாமல் அனைத்து மதங்களும் பொதுவானதாக இருக்க வேண்டும்
- குடியுரிமை திருத்தச் சட்டத்தில் முஸ்லிம்களையும் ஈழத் தமிழர்களின் உட்படுத்த நடவடிக்கை எடுக்க வலியுறுத்தப்படும்