நாடாளுமன்ற தேர்தலில் பாஜக கூட்டணியில் இடம்பெற்றுள்ள அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பாக போட்டியிடவுள்ள வேட்பாளர்களின் பட்டியலை டிடிவி தினகரன் அறிவித்துள்ளார்.
அமமுக வேட்பாளர்கள் அறிவிப்பு
நாடாளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தேர்தல் களத்தில் அரசியல் கட்சிகள் இறங்கியுள்ளன. அந்த வகையில் பாஜக கூட்டணியில் இடம்பெற்றிருந்த அமமுகவிற்கு இரண்டு தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. அந்த வகையில், நாடாளுமன்ற தேர்தலில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் போட்டியிட உள்ள வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். தேனி தொகுதியில் - டிடிவி தினகரன், திருச்சி தொகுதியில் - செந்தில் நாதன் ஆகியோர் போட்டியிடவுள்ளனர். இதற்கான அறிவிப்பை டிடிவி தினகரன் வெளியிட்டுள்ளார்.
ஓபிஎஸ் ஆதரவு
கடந்த நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக சார்பாக போட்டியிட்டு முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வத்தின் மகன் ஓ.பி.ரவீந்திரநாத் வெற்றி பெற்றிருந்தார். எனவே இந்த முறை அவர் போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தேனி தொகுதியில் ஓபிஆரின் வெற்றிக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதனையடுத்து தொகுதி மாறுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் சின்னம் எதுவும் உறுதி செய்யப்படாத காரணத்தால் தேர்தலில் ஓபிஆர் போட்டியிடவில்லை. அதே நேரத்தில் தனது செல்வாக்கை நிருபிக்கும் வகையில் தானே போட்டியிடவுள்ளதாக ஓ.பன்னீர் செல்வம் அறிவித்துள்ளார். அந்த வகையில்ர ராமநாதபுரத்தில் போட்டியிடவுள்ளதாக அறிவித்துள்ளார். எனவே தேனி தொகுதியில் போட்டியிடும் டிடிவி தினகரனுக்கு ஆதரவாக ஓபிஎஸ் ஆதரவாளர்கள் களம் இறங்குவார்கள் என கூறப்படுகிறது.
இதையும் படியுங்கள்