ஈரோடு தேர்தலுக்கு திமுக பணம் கொடுத்தால் வாங்கிக்கொள்ளுங்கள்.! ஓட்டை இரட்டை இலைக்கு போடுங்கள்- இபிஎஸ்

Published : Feb 10, 2023, 08:07 AM IST
ஈரோடு தேர்தலுக்கு திமுக பணம் கொடுத்தால் வாங்கிக்கொள்ளுங்கள்.! ஓட்டை இரட்டை இலைக்கு போடுங்கள்- இபிஎஸ்

சுருக்கம்

திறமை இல்லாத பொம்மை முதல்வரா ஸ்டாலின் இருப்பதாக குற்றம்சாட்டிய எடப்பாடி பழனிசாமி, கலெக்‌ஷன், கமிஷன், கரப்ஷனில் சூப்பர் முதலமைச்சராக உள்ளதாக விமர்சித்தார்.

ஈரோடு வெற்றி நாடாளுமன்ற தேர்தலில் எதிரொலிக்கும்

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான பிரச்சாரமானது சூடுபிடித்துள்ளது. இந்தநிலையில் அதிமுக வேட்பாளர் அறிமுக கூட்டம் ஈரோட்டில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, பாஜக மூத்த தலைவர் சிபி ராதாகிருஷ்ணன், தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர். அப்போது கூட்டத்தில் பேசிய எடப்பாடி பழனிசாமி, தமிழகம் மட்டுமல்ல இந்தியாவே ஈரோடு கிழக்கு தொகுதி நோக்கி பார்த்து கொண்டிருப்பதாகவும், அடுத்த நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் இந்த  வெற்றி எதிரொலிக்கும் என கூறினார்.2024 நாடாளுமன்ற தேர்தலில் அனைத்து தொகுதிகளிலும் வெற்றி பெறுவோம் என நம்பிக்கை தெரிவித்தார்.

முக்கிய மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் காலம் தாழ்த்தும் ஆளுநர்! தமிழக அரசுக்கு ஆதரவாக குரல் கொடுத்த டிடிவி


திமுக ஆட்சியில் போதை பொருள் அதிகரிப்பு

21 மாத திமுக ஆட்சியில் ரவுடிகள் அட்டகாசம், போதை பொருள் விற்பனைதான் அதிகரித்துள்ளதாக தெரிவித்தவர், எந்த சாதனையும் செய்யவில்லை என விமர்சித்தார். அதிமுக ஆட்சி காலத்தில் 1652 கோடியில் அத்திகடவு அவனாசி திட்டத்தை தந்தோம். வேலைவாய்ப்பு வழங்க, பொங்கலுக்கு விலையில்லா வேட்டி சேலை வழங்கினோம். அதன்மூலம் வேலை வாய்ப்பு கிடைத்தது. தற்போது வேட்டி சேலை வழங்கப்படாததால் விசைத்தறி தொழிலார்கள் வேலை இழந்துவிட்டனர். விசைத்தறி கூடங்கள் மூடப்பட்டு விட்டன. இதற்கெல்லாம் காரணம் திறமை இல்லாத பொம்மை முதல்வரா ஸ்டாலின் உள்ளார். கலெக்‌ஷன், கபிஷன், கரப்சனில் சூப்பர் முதலமைச்சராக உள்ளார். அதிகமாக சம்பாதித்து தருபவர்தான் சிறந்த அமைச்சர். அப்படிபட்டவர்தான் இங்கு உள்ளார்.

எடப்பாடியால் இரட்டை இலை சின்னத்திற்கான செல்வாக்கு குறைந்து விட்டது.! அதிமுகவினரை சீண்டும் டிடிவி தினகரன்


ஓட்டுக்கு பணம் கொடுத்தால் வாங்குங்கள்

அதிமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட திட்டத்தைதான் முதல்வர் திறந்து வைத்து வருகிறார். தந்தைக்கு நினைவு சின்னம் வைக்க நிதி ஒதுக்கியதுதான் இவரது சாதனை. கடலில்தான் 80 கோடியில் பேனா வைக்க வேண்டுமா என கேள்வி எழுப்பியவர்,  2 கோடியில் பேனா வைத்துவிட்டு மீதியை மக்களுக்கு செலவிடலாமே என கூறினார். பொங்கல் தொகுப்பில் 500 கோடி ஊழல் நடத்தி உள்ளனர். அதனைதான் இப்போது தேர்தலுக்கு செலவிடுகின்றனர். அது உங்கள் பணம். அதனை வாங்கிக்கொள்ளுங்கள். வாக்கை இரட்டை இலைக்கு போடுங்கள் என கூறினார். திமுகவுக்கு தில், திரானி இருந்தால் 21 மாத ஆட்சியில் ஈரோடு கிழக்கு தொகுதியில் நிறைவேற்றப்பட்ட திட்டங்களை சொல்லுங்கள். ஈரோடு வெற்றி மூலம் திமுகவின் குடும்ப ஆட்சிக்கு முடிவு கட்டுவோம்.


அதிமுக திட்டத்தை முடக்கிய திமுக

ரெட் ஜெயன்ட் நிறுவனத்தால் 180 திரைப்படங்கள தியேட்டர் இல்லாமல் முடங்கி கிடக்கிறது. மின் கட்டண உயர்வு ஷாக் அடிக்கிறது. 4,80,000 கோடி கடன் வைத்துவிட்டதாகவும், திமுக வந்தால் கடனை அடைப்போம் என்று கூறினார்கள். ஆனால் இப்போது கூடுதலாக 1,62,000 கோடி கடன் வைத்துள்ளனர். பழைய ஒய்வூதியம் திட்டம் கொண்டுவருவோம் என கூறி அரசு ஊழியர்களையும் ஏமாற்றி விட்டனர்.அம்மா இருசக்கர வாகன மானியம் என்ன ஆனது, தாலிக்கு தங்கம் திட்டம் முடக்கப்பட்டுள்ளது. அரசு பள்ளி மாணவர்களுக்கு வழங்கிய மடிகணினி திட்டம் 53 லட்சம் மாணவர்களுக்கு வழங்கப்பட்டது. அதுவும் முடக்கி விட்டதாக எடப்பாடி பழனிசாமி விமர்சித்தார்.

இதையும் படியுங்கள்

ஈரோடு தேர்தலில் இபிஎஸ் டெபாசிட் வாங்கவில்லையென்றால் கட்சியை ஓபிஎஸ்யிடம் ஒப்படைக்க வேண்டும்- புகழேந்தி அதிரடி

PREV
click me!

Recommended Stories

ஜனநாயகன் தயாரிப்பாளருக்கு முக்கிய அரசு பதவி! விஜய் முடிவின் பின்னணி இதுதான்! பரபரப்பு தகவல்!
Government scheme: பெண் குழந்தைகளுக்கு அரசு தரும் ரூ.50,000.! யாருக்கெல்லாம் கிடைக்கும் தெரியுமா?