மாணவ, மாணவிகளை போலி வாக்குறுதியால் ஏமாற்றியதோடு, அடுத்த தலைமுறையின் கல்விக்கு கடும் பாதிப்பை ஏற்படுத்தி தமிழினத்திற்கே திமுக அரசு பெரும் துரோகத்தை இழைத்துள்ளதாக பாஜக மாநில துணைத்தலைவர் நாராயணன் திருப்பதி குற்றம்சாட்டியுள்ளார்.
மாணவ, மாணவிகளை போலி வாக்குறுதியால் ஏமாற்றியதோடு, அடுத்த தலைமுறையின் கல்விக்கு கடும் பாதிப்பை ஏற்படுத்தி தமிழினத்திற்கே திமுக அரசு பெரும் துரோகத்தை இழைத்துள்ளதாக பாஜக மாநில துணைத்தலைவர் நாராயணன் திருப்பதி குற்றம்சாட்டியுள்ளார். இதுக்குறித்த அவர் தனது டிவிட்டரில் பக்கத்தில், நாங்கள் ஆட்சிக்கு வந்தால், மாணவர்களின் கல்விக் கடன் ரத்து செய்யப்படும், தள்ளுபடி செய்யப்படும் என்று ஈரோட்டில் இரண்டு வருடங்களுக்கு முன் இன்றைய முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் கூறியது ஈரோடு கிழக்கு மக்களுக்கு நினைவில் இருக்க வேண்டும்.
இதையும் படிங்க: முக்கிய மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் காலம் தாழ்த்தும் ஆளுநர்! தமிழக அரசுக்கு ஆதரவாக குரல் கொடுத்த டிடிவி
இன்று வரை மாணவர்களின் கல்வி கடன் ரத்து செய்யப்படவில்லை என்பதோடு, கடன் தள்ளுபடி செய்யப்படும் என்ற நம்பிக்கையில் வங்கிகளில் கடன் செலுத்த பல மாணவர்கள் தயங்கிக் கொண்டிருக்கிறார்கள். இதனால் வங்கிகளின் வாராக்கடன் அதிகரிப்பதோடு, மேலும் புதிய கல்வி கடன்களை அளிப்பதற்கு தயக்கம் காட்டுகின்றன வங்கிகள்.
இதையும் படிங்க: வாக்குறுதி கொடுத்து ஏமாற்றுவது அழகல்ல.. பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துங்க.. திமுகவை அலறவிடும் கேப்டன்.!
நம் மாணவ, மாணவிகளை போலி வாக்குறுதியால் ஏமாற்றியதோடு, அடுத்த தலைமுறையின் கல்விக்கு கடும் பாதிப்பை ஏற்படுத்தி தமிழினத்திற்கே பெரும் துரோகத்தை இழைத்துள்ளது திமுக அரசு. உடனடியாக தமிழக அரசு, மாணவ, மாணவிகளின் கல்விக்கடனை தள்ளுபடி செய்து அந்த பணத்தை வங்கிகளுக்கு செலுத்த வேண்டும். இல்லையேல், அடுத்த தலைமுறை தமிழர்களின் கல்வி கேள்விக்குறியே என்று குறிப்பிட்டுள்ளார்.
"நாங்கள் ஆட்சிக்கு வந்தால், மாணவர்களின் கல்விக் கடன் ரத்து செய்யப்படும், தள்ளுபடி செய்யப்படும்" என்று ஈரோட்டில் இரண்டு வருடங்களுக்கு முன் இன்றைய முதல்வர் அவர்கள் கூறியது ஈரோடு கிழக்கு மக்களுக்கு நினைவில் இருக்க வேண்டும்.
இன்று வரை மாணவர்களின் கல்வி கடன் ரத்து(1/4)