21 மாத திமுக ஆட்சி.? எடப்பாடி அலை வீசுது.! துணிவுடன் தேர்தலை சந்திக்கும் அதிமுக - ‘கலகல’ செல்லூர் ராஜு

By Raghupati R  |  First Published Feb 15, 2023, 4:51 PM IST

கடந்த 25 மாதங்களில் திமுகவினர் என்ன செய்தார்கள் என்ற உண்மையை மக்களிடம் சொல்கிறோம். - முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ.


ஈரோடு கிழக்கு தொகுதிக்கான இடைத்தேர்தல் வரும் 27 ஆம் தேதி நடைபெற உள்ளது. அன்று பதிவாகும் வாக்குகள் மார்ச் 2 ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது.

ஈரோடு கிழக்கு தொகுதியில் காங்கிரஸ் கட்சியின் ஈவிகேஎஸ் இளங்கோவன், அதிமுகவின் தென்னரசு ஆகியோரிடையே கடும் போட்டி நிலவுகிறது. அத்துடன் தேமுதிக சார்பில் ஆனந்த், நாம் தமிழர் கட்சியின் சார்பில் மேனகா ஆகியோரும் போட்டியிடுகின்றனர். இத்தொகுதியில் மொத்தம் 77 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.

Tap to resize

Latest Videos

இதையும் படிங்க..NIA Raid : 40 இடங்களில் நடைபெற்ற என்.ஐ.ஏ சோதனை.. கைப்பற்றப்பட்ட பணம் & பொருட்கள் என்னென்ன.? வெளியான தகவல்

ஈரோடு கிழக்கில் பிரதான அரசியல் கட்சிகள் காங்கிரஸ், அதிமுக, நாம் தமிழர், தேமுதிக. ஆனால் மேலும் 20க்கும் மேற்பட்ட அரசியல் கட்சிகளும் தங்களது வேட்பாளர்களை நிறுத்தி உள்ளன.அனைத்து கட்சிகளும் ஈரோடு கிழக்கில் தீவிரமாக பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

ஈரோடு ஆலமரத்தெருவில் அதிமுக வேட்பாளர் கே.எஸ் தென்னரசை ஆதரித்து, முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ திண்ணை பிரசாரம் செய்தார். பிறகு செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ, கடந்த 25 மாதங்களில் திமுகவினர் என்ன செய்தார்கள் என்ற உண்மையை மக்களிடம் சொல்கிறோம். மக்கள் வாங்குவதை வாங்கிக்கொண்டு உங்களுக்கு ஓட்டு போடுகிறோம் என சொல்கின்றனர்.

நூதன முறையில் பிரசாரம் செய்யும் அமைச்சர்களை போல் எங்களால் பிரசாரம் செய்யமுடியாது. நாங்க என்ன தப்பு செய்தோம் என்று கூறி மக்களை நேரில் சந்தித்து வாக்கு கேட்டு வருகிறோம். காங்கிரஸ் வேட்பாளருக்காக அனைத்து அமைச்சர்களும் வந்துவிட்டனர். எங்கள் மடியில் கனம் இல்லை. அதிமுக ஆட்சி காலத்தில் சிறப்பாக செயல்பட்டோம். அகில இந்திய அளவில் தமிழகத்தை முதன்மையான மாநிலமாக மாற்றி இருக்கிறோம். துணிவோடு மக்களை சந்திக்கிறோம்.

உரிமையோடு வாக்கு கேட்கிறோம். நாங்கள் எதிர்க்கட்சியாக இருந்தாலும் மகிழ்ச்சியாக இருக்கிறோம். ஆனால் திமுக அமைச்சர்கள் முகத்தில் கவலை ஓடுகிறது. தங்கள் வீட்டு பிள்ளையாக மக்கள் முக மலர்ச்சியோடு எங்களை வரவேற்கின்றனர். எடப்பாடி பழனிசாமி அலை அடிக்கிறது. இந்த தேர்தல் திமுகவிற்கு சுனாமி தான். தேர்தல் முடிந்த பின்னர் முதல்வர் ஸ்டாலின் வருத்தப்படுவார் என்று பேசினார் செல்லூர் ராஜு.

இதையும் படிங்க..Coimbatore : கோவை கொலை சம்பவம்.. 2 பேரை சுட்டுப்பிடித்த போலீஸ் - பரபரப்பு நிமிடங்கள் !!

click me!