இது மாணவர்களுக்கு அரசியல் சாயத்தை பூசி சீரழிக்கும் முயற்சி! செந்தில் பாலாஜிக்கு எதிராக கொதிக்கும் பாஜக..!

Published : Feb 15, 2023, 03:22 PM IST
இது மாணவர்களுக்கு அரசியல் சாயத்தை பூசி சீரழிக்கும் முயற்சி! செந்தில் பாலாஜிக்கு எதிராக கொதிக்கும் பாஜக..!

சுருக்கம்

அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கு வினா விடை வங்கி புத்தகம் வழங்கப்பட்டு வருகிறது. 'வினா விடை வங்கி' புத்தகத்தில் முதல்வர் ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின் மற்றும் அமைச்சர் செந்தில்பாலாஜி புகைப்படம் இடம்பெற்றுள்ளது. 

பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் இது போன்ற அரசியல் கேவலங்களை மாணவர்கள் மத்தியில் திணிப்பதை நிறுத்த தொடர்புடைய கல்வி துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும் என பாஜகவை சேர்ந்த நாராயணன் திருப்பதி வலியுறுத்தியுள்ளார்.

தமிழகத்தில் 10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெற உள்ளது. இதனை மாணவர்கள் அச்சமின்றி எதிர்கொள்ள அரசு பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன்படி அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கு வினா விடை வங்கி புத்தகம் வழங்கப்பட்டு வருகிறது. 'வினா விடை வங்கி' புத்தகத்தில் முதல்வர் ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின் மற்றும் அமைச்சர் செந்தில்பாலாஜி புகைப்படம் இடம்பெற்றுள்ளது. இதற்கு  பாஜக சேர்ந்த நாராயணன் திருப்பதி  மலிவான விளம்பரத்தை அமைச்சர் செந்தில்பாலாஜி செய்து வருவது கண்டிக்கத்தக்கது என தெரிவித்துள்ளார். 

இதுதொடர்பாக பாஜக மாநிலத் துணைத்தலைவர் நாராயணன் திருப்பதி வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில்;- பள்ளி மாணவர்களிடத்தில் மலிவான அரசியல் விளம்பரம் - திராவிட மாடல்? 
படம் 1 - பொள்ளாச்சி ஆண்கள் அரசு மேல்நிலைப் பள்ளி.
படம் 2 - வால்பாறை அரசு மேல்நிலைப் பள்ளி.
'வினா விடை வங்கி' என ஒரு அறக்கட்டளையின் பெயரில்  பெரும்பாலான அரசு பள்ளிகளில் இது போன்ற மலிவான விளம்பரத்தை அமைச்சர் செந்தில்பாலாஜி செய்து வருவது கண்டிக்கத்தக்கது. 

மாணவர்களுக்கு அரசியல் சாயத்தை பூசி சீரழிக்கும் முயற்சியே இது. உடனடியாக கல்வி அமைச்சர் அன்பில் மகேஷ் அவர்கள் இது போன்ற அரசியல் கேவலங்களை மாணவர்கள் மத்தியில் திணிப்பதை நிறுத்த தொடர்புடைய கல்வி துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும் என நாராயணன் திருப்பதி கூறியுள்ளார். 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

நாளை தவெக வில் சேருகிறார் முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம்..! டெல்டாவை தட்டி தூக்க பக்கா ஸ்கெட்ச்
ஜி.கே.மணி மனுசனே இல்ல.. அப்பாவையும், என்னையும் பிரிச்சிட்டாரு.. போட்டுத் தாக்கிய அன்புமணி!