தமிழகத்தில் அதிகரிக்கும் வடமாநிலத்தவர்களின் குற்ற செயல்கள்..!பறிபோகும் தமிழர்கள் வேலை வாய்ப்பு- டிடிவி தினகரன்

Published : Feb 15, 2023, 02:04 PM IST
தமிழகத்தில் அதிகரிக்கும் வடமாநிலத்தவர்களின் குற்ற செயல்கள்..!பறிபோகும் தமிழர்கள் வேலை வாய்ப்பு- டிடிவி தினகரன்

சுருக்கம்

தமிழகத்தில் பல்வேறு தொழில்களில் வடமாநிலத்தவர் உள்ளிட்ட பிற மாநில தொழிலாளர்களை நியமிப்பது அதிகரிப்பதால் தமிழக இளைஞர்களின் வாய்ப்புகள் பறிபோவதாக டிடிவி தினகரன் வேதனை தெரிவித்துள்ளார்.  

வடமாநிலத்தவர்கள் ஆதிக்கம்

தமிழகத்தில் வேலைவாய்ப்பு அதிகமாக உள்ளதால் வட மாநிலங்களான பீகார், ஒரிசா, மேற்குவங்காளம், ஜார்கண்ட் உள்ளிட்ட இடங்களில் இருந்து நாள்தோறும் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் தமிழகத்தில் வேலை தேடி வருகின்றனர். கட்டிட பணி, பாஸ்ட் புட் கடை, டீக்கடை உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் வட மாநிலத்தவர்களின் ஆக்கிரமிப்பு அதிகமாக காணப்படுகிறது. குறிப்பாக தமிழர்களை விட குறைவான சம்பளத்தில் வேலை பார்க்க தயாராக இருப்பதால் அவர்களுக்கு முக்கியத்துவம் ஏற்பட்டுள்ளது. அதே நேரத்தில் பல்வேறு இடங்களில் நடைபெறும் கொலை மற்றும் கொள்ளை சம்பவங்களிலும் வட மாநிலத்தவர்களின் பங்கு அதிகமாக உள்ளதாக கூறப்படுகிறது.

பிபிசி அலுவலகத்தில் ரெய்டு..! வருமான வரித்துறையை ஏவி விட்டு பழிவாங்க முற்படுவதா- சீமான் ஆவேசம்

குற்ற சம்பவங்களில் வடமாநிலத்தவர்கள்

குறிப்பாக சென்னை நகைக்கடை கொள்ளை, திருவண்ணாமலை ஏடிஎம் கொள்ளைகள் வடமாநிலத்தவர்கள் ஈடுபட்டிருப்பதாக போலீசார் தெரிவித்துள்ளனர். இந்தநிலையில் இது தொடர்பாக அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், தமிழ்நாட்டில் வடமாநில தொழிலாளர்களின் அத்துமீறிய செயல்கள் அதிகரித்துவருவது பெரும் அச்சத்தையும் கவலையையும் ஏற்படுத்துகிறது.

 

பல்வேறு தொழில்களில் வடமாநிலத்தவர் உள்ளிட்ட பிற மாநில தொழிலாளர்களை நியமிப்பது அதிகரிப்பதால் தமிழக இளைஞர்களின் வாய்ப்புகள் பறிபோகின்றன. மேலும், அவர்களால் சட்டம்-ஒழுங்கு பிரச்னைகளும் ஏற்படுகின்றன. பிற மாநில தொழிலாளர்கள் குற்றச்செயல்களில் ஈடுபடுவதும் அதிகரித்து வருவதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

பதுங்கி இருந்து பாயப்போகும் ஓபிஎஸ்.? மாவட்ட செயலாளர்கள் கூட்டத்திற்கு திடீர் அழைப்பு..! காரணம் என்ன.?

ஆய்வு குழு அமைத்து முடிவு

எனவே, இதுபோன்ற சம்பவங்கள் இனியும் தொடராமல் இருக்கவும், தமிழ்நாட்டு இளைஞர்களுக்கான வேலைவாய்ப்புகள் பறிபோவதைத் தடுக்கவும், அதே நேரத்தில் வெளிமாநில இளைஞர்களின் உழைப்பை உரிய வகையில் பயன்படுத்துவது குறித்தும் ஆராய்வதற்கு நிபுணர் குழுவை அமைத்து அரசு ஆய்வு செய்ய வேண்டும். அந்தக் குழு அளிக்கும் பரிந்துரைகளின்படி தமிழ்நாடு அரசு உரிய முடிவை காலதாமதமின்றி எடுக்க வேண்டும் என வலியுறுத்துகிறேன் என டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

இதையும் படியுங்கள்

பாஜக மூத்த நிர்வாகியின் வீடு மீது தாக்குதல்.! கோழைத்தனமான செயல்களுக்கெல்லாம் அஞ்சமாட்டோம்- அண்ணாமலை ஆவேசம்
 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

இப்படியொரு ப்ளானா..? டபுள் ஸ்டாண்ட் விஜயின்..! என்.டி.ஏ கூட்டணிக்கு கேட் போடும் ராகுல்..! திமுகவுக்கு திருகுவலி..!
திருமா தில்லுமுல்லு நாடகம்போடுகிறார்..! பட்டியல் சமூக மக்களுக்காக போராடுவது பாமகதான்..! வழக்கறிஞர் பாலு பளீர்..!