என் வாழ்க்கையே போராட்டம் தாங்க.. எங்களோட வலிமை பார்க்குறீங்களா.! கெத்து காட்டிய எடப்பாடி பழனிசாமி

By Raghupati RFirst Published Sep 6, 2022, 10:27 PM IST
Highlights

உயர் நீதிமன்ற இரு நீதிபதிகள் அமர்வு அளித்த தீர்ப்பு எடப்பாடி பழனிசாமி தரப்புக்கு வெற்றியைக் கொடுத்த நிலையில், அதனை எதிர்த்து சுப்ரீம் கோர்ட் செல்ல இருக்கிறார் ஓபிஎஸ்.

உச்ச நீதிமன்றத்தில் கேவியட் மனுவை தாக்கல் செய்துள்ள எடப்பாடி பழனிசாமி, தொடர்ந்து, முக்கிய சட்ட வல்லுநர்களுடன் ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறார்.தற்போது அடுத்தகட்டமாக, பொதுச் செயலாளர் பதவிக்கான தேர்தல் அறிவிப்பை வெளியிட்டு, ஏகமனதாக தன்னைத் தேர்ந்தெடுக்கும் வகையில் பணிகளை ஈபிஎஸ் தொடங்கி இருப்பதாகக் கூறப்படுகிறது.

உயர் நீதிமன்ற இரு நீதிபதிகள் அமர்வு அளித்த தீர்ப்பு எடப்பாடி பழனிசாமி தரப்புக்கு வெற்றியைக் கொடுத்த நிலையில், அதனை எதிர்த்து சுப்ரீம் கோர்ட் செல்ல இருக்கிறார் ஓபிஎஸ்.  இன்றோ நாளையோ ஓபிஎஸ் தரப்பு உச்ச நீதிமன்றத்தில் அப்பீல் செய்ய இருக்கிறது. இதற்கிடையே, எடப்பாடி பழனிசாமி நேற்று, உச்ச நீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல் செய்தார். அதிமுக விவகாரத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டால், தங்கள் தரப்பையும் கேட்க வேண்டும் என முறையிட்டுள்ளார் ஈபிஎஸ். 

மேலும் செய்திகளுக்கு..கடைசியில் 132 கி.மீ வேகம்.. சைரஸ் மிஸ்திரி இறப்புக்கு இந்த பெண் காரணமா? வெளியான அதிர்ச்சி தகவல்!

ஓபிஎஸ் தரப்புக்கு நெருக்கடியை அதிகரிக்கும் வகையில், பொதுச் செயலாளர் தேர்தலை நடத்தும் முடிவுக்கு வந்திருக்கிறார் எடப்பாடி பழனிசாமி. நீதிமன்றத்தில் ஓபிஎஸ் பின்னடைவைச் சந்தித்துள்ள நேரத்தில், இன்னொரு திசையில் இந்த அட்டாக்கை தொடுக்க ஈபிஎஸ் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. 

இந்நிலையில் இன்று திண்டுக்கல் மேற்கு மாவட்டம் ஒட்டன்சத்திரம் கிழக்கு ஒன்றிய செயலாளர் நடராஜன் அவர்களின் மகள் சத்தியசீலா திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி  கலந்து கொண்டார். பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், 'நான் பொறுப்பேற்றிலிருந்து இன்று வரை போராடிக் கொண்டுதான் இருக்கிறேன். ஆட்சியில் இருக்கும் போதும் போராடிக் கொண்டுதான் இருந்தேன்.

மேலும் செய்திகளுக்கு..முதலிரவில் மனைவிக்கு கன்னித்தன்மை டெஸ்ட் எடுத்த கணவன்.. கடைசியில் காத்திருந்த அதிர்ச்சி!

எதிர் கட்சியாக இருக்கும் போதும் போராடி கொண்டுதான் இருக்கிறேன். போராட்டம் போராட்டம் என்று தாண்டி வெற்றியை பெற்றுக் கொண்டு இருக்கிறேன். அதிமுக வலிமையுடன் திகழ்ந்து கொண்டிருக்கிறது. அதிமுகவை பல பேர் விலக்க நினைக்கிறார்கள். ஒரு போதும் நடக்காது. மக்கள் சக்தி உள்ள இயக்கம். எவராலும் ஒருபோதும் கட்சியை பிளவு படுத்த முடியாது’ என்று பேசினார்.

மேலும் செய்திகளுக்கு..ஒன்றிணைவோம் வா.. அதிமுகவின் முதல்வர் வேட்பாளர் இவர்தான்.! எடப்பாடியா? பன்னீரா? குழப்பத்தில் ர.ரக்கள்

click me!