ஒன்றிணைவோம் வா.. அதிமுகவின் முதல்வர் வேட்பாளர் இவர்தான்.! எடப்பாடியா? பன்னீரா? குழப்பத்தில் ர.ரக்கள்

By Raghupati RFirst Published Sep 6, 2022, 8:54 PM IST
Highlights

உச்ச நீதிமன்றத்தில் கேவியட் மனுவை தாக்கல் செய்துள்ள எடப்பாடி பழனிசாமி, தொடர்ந்து, முக்கிய சட்ட வல்லுநர்களுடன் ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறார்.

தற்போது அடுத்தகட்டமாக, பொதுச் செயலாளர் பதவிக்கான தேர்தல் அறிவிப்பை வெளியிட்டு, ஏகமனதாக தன்னைத் தேர்ந்தெடுக்கும் வகையில் பணிகளை ஈபிஎஸ் தொடங்கி இருப்பதாகக் கூறப்படுகிறது.உயர் நீதிமன்ற இரு நீதிபதிகள் அமர்வு அளித்த தீர்ப்பு எடப்பாடி பழனிசாமி தரப்புக்கு வெற்றியைக் கொடுத்த நிலையில், அதனை எதிர்த்து சுப்ரீம் கோர்ட் செல்ல இருக்கிறார் ஓபிஎஸ்.

இன்றோ நாளையோ ஓபிஎஸ் தரப்பு உச்ச நீதிமன்றத்தில் அப்பீல் செய்ய இருக்கிறது. இதற்கிடையே, எடப்பாடி பழனிசாமி நேற்று, உச்ச நீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல் செய்தார். அதிமுக விவகாரத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டால், தங்கள் தரப்பையும் கேட்க வேண்டும் என முறையிட்டுள்ளார் ஈபிஎஸ். 

மேலும் செய்திகளுக்கு..ராகுல் காந்தி நடைபயணம்; 2024ல் தரமான சம்பவத்துக்கு தயாரான 3 முதல்வர்கள்.. ஸ்டாலினும் இருக்காரு! திகிலில் பாஜக

ஓபிஎஸ் தரப்புக்கு நெருக்கடியை அதிகரிக்கும் வகையில், பொதுச் செயலாளர் தேர்தலை நடத்தும் முடிவுக்கு வந்திருக்கிறார் எடப்பாடி பழனிசாமி. நீதிமன்றத்தில் ஓபிஎஸ் பின்னடைவைச் சந்தித்துள்ள நேரத்தில், இன்னொரு திசையில் இந்த அட்டாக்கை தொடுக்க ஈபிஎஸ் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஓபிஎஸ் தரப்பு ஒரு பக்கம் அப்செட்டாக இருக்க, மற்றொரு பக்கம் எடப்பாடி தரப்பு மகிழ்ச்சியாக இருக்கிறது என்றுதான் சொல்ல வேண்டும். 

இன்று செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்,உசிலம்பட்டி 58 கிராம கால்வாயில் பணிகளுக்காக நிதி ஒதுக்கி நீரை திறக்க உறுதுணையாக இருந்தவர் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி. தேவருக்கு எந்த அளவு மரியாதை வைத்துள்ளோமோ, அதே அளவு பி.கே.மூக்கையாத்தேவருக்கும் மரியாதையுடனும் அன்பு பாசத்தோடு இருப்போம் அவர் புகழ் உயர அதிமுக அனைத்து முயற்சிகளையும் எடுக்கும்.  அதிமுகவில் அனைவரும் ஒன்று சேர்வோம்’ என்று கூறினார்.

மேலும் செய்திகளுக்கு..முதலிரவில் மனைவிக்கு கன்னித்தன்மை டெஸ்ட் எடுத்த கணவன்.. கடைசியில் காத்திருந்த அதிர்ச்சி!

மற்றொரு விழாவில் பேசிய முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு, ‘மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை கொண்டு வர எங்கள் ஆட்சியில் எவ்வளவு அழுத்தம் கொடுக்க முடியுமோ அவ்வளவு அழுத்தம் கொடுத்து விட்டோம், எங்கள் ஆட்சியில் கொரோனோவால் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுவதில் காலதாமதம் ஆனது, தமிழக அரசு விரைவாக மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை கொண்டு வர வேண்டும். எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் அதிமுக வலுவாக உள்ளது. எத்தனை தீர்ப்புகள் வந்தாலும் அதிமுகவை ஒன்றும் செய்ய முடியாது. தொண்டர்கள் முடிவு எடுத்து விட்டால் அதை யாரும் மாற்ற முடியாது.

எதிர்காலத்தில் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் அதிமுக ஆட்சியை பிடிக்கும். மாற்று கருத்து ஏதுமின்றி சொல்கிறேன் எடப்பாடி பழனிச்சாமி தான் மீண்டும் முதல்வர ஆவார்’ என்று கூறினார்.எடப்பாடி தரப்பும், ஓபிஎஸ் தரப்பும் மல்லுக்கட்டி நிற்கும் இந்த சூழலில் அதிமுகவின் அடிமட்ட தொண்டர்களோ குழப்பத்தில் இருக்கிறார்கள். அடுத்து வரும் தேர்தலை அதிமுக எப்படி எதிர்கொள்ள போகிறதோ என்பதே ரத்தத்தின் ரத்தங்களின் கோரிக்கையாக இருக்கிறது.

மேலும் செய்திகளுக்கு..கடைசியில் 132 கி.மீ வேகம்.. சைரஸ் மிஸ்திரி இறப்புக்கு இந்த பெண் காரணமா? வெளியான அதிர்ச்சி தகவல்!

click me!