கைகளைக் கழுவ சானிடைசருக்கு பதில் இதைப்பயன்படுத்தலாமே... இளம் ஜோதிடர் பிரக்யா ஆனந்த் அறிவுறுத்தல்..!

By Thiraviaraj RMFirst Published Apr 9, 2020, 4:37 PM IST
Highlights

இனப்பெருக்கத் தொகுதி, நரம்புத் தொகுதி போன்றவை பாதிக்கப் படலாம் என இளம் ஜோதிடர் அபிக்யா ஆனந்த் எச்சரித்துள்ளார்.
 

இனப்பெருக்கத் தொகுதி, நரம்புத் தொகுதி போன்றவை பாதிக்கப் படலாம் என இளம் ஜோதிடர் அபிக்யா ஆனந்த் எச்சரித்துள்ளார்.

இதுகுறித்து அவர், ‘’உண்மையில் இந்தக் கொரோனா தொற்றின் வீரியம் இயற்கை அன்னைக்கு எதிராக இன்றைய மனிதனின் கர்மாவை சமப்படுத்தும் வகையில் தான் தொழிற்படுகின்றது. டிசம்பர் 28 ஆம் திகதியளவில் சனியும், வியாழனும் மிகவும் நெருங்கி மகர ராசியுடன் நேர்கோட்டில் வருவதால் அடுத்த அனர்த்தம் ஏற்படவுள்ளது. இந்த அனர்த்தம் பெரும்பாலும் பாரியளவிலான வியாதிகள் மற்றும் பஞ்சமாக இருக்கும்.

இப்போதே விவசாயத்துக்கு உலகப் பொருளாதாரம் இடமளிக்கா விட்டால் இது மனித குலத்துக்கு நிச்சயம் ஒரு பெரிய அழிவைக் கொண்டு வரவுள்ளது. ஆனால் இது ஒரு பூரண அழிவாக இருக்காது. விவசாயம் எவ்வளவு முக்கியமோ அதே அளவு மனித உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை ஊக்குவிக்க நாம் சைவ உணவுகளை உண்பதும், அற்புத மூலிகை மருந்துகளைப் பாவிப்பதும் ஆகும்.

கொரோனா வைரஸ் இன் தாக்கத்தைத் தணிக்கும் வெள்ளைப் பூடு, அமிர்தவல்லி போன்ற மூலிகை மருந்துகளை அரசாங்கம் இலவசமாக மக்களுக்கு வழங்க வேண்டும்.

கைகளைக் கழுவ சானிடைசர்களை விட லெமன், வெள்ளைப் பூடு சாறைப் பிளிந்து அதன் மூலம் கைகளைக் கழுவலாம். இவ்விரு மருந்துகளினதும் மகத்தான மருத்துவ குணத்தை எந்த விஞ்ஞானிகளாலும் மறுக்க முடியாது. இலவசமாகப் பெறும் சேனிடைசர்களை அதன் ஆபத்து புரியாது கிராமத்து சிறுவர்கள் அதிகமாகப் பாவித்து முகம், கண் மூக்கைத் தொடும் போது இதில் உள்ள இரசாயனம் அவர்களைப் பாதிக்கும் அபாயம் உள்ளது. முக்கியமாக வருங்காலத்தில் அவர்களது இனப்பெருக்கத் தொகுதி, நரம்புத் தொகுதி போன்றவை பாதிக்கப் படலாம்.

எனவே இந்தியா முழுதும் இலவசமாக முகக் கவசத்துடன் சேனிடைசர்களுக்குப் பதிலாக இயற்கை மூலிகையான வெள்ளைப் பூடு, அமிர்தவல்லி போன்றவற்றை வழங்கப் பரிந்துரைக்கிறேன். சாணக்கியரின் நீதிப்படி நாம் எந்த நேரத்திலும் இது போன்ற மூலிகைகளை நம்முடன் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.

click me!