பொள்ளாச்சியில் ஆளுநர் ஆர்.என்.ரவியை போஸ்ட் மாஸ்டராக சித்தரித்து நகர திமுகவினர் ஒட்டிய சுவரொட்டிகளால் பரபரப்பு.
கோவையில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக சென்னையில் இருந்து கோவை வருகை தரும் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி முதலில் கோவை பாரதியார் பல்கலைகத்தில் நடைபெறும் பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்கிறார்.
undefined
இதனைத் தொடர்ந்து மீண்டும் பல்வேறு நிகழ்ச்சிக்காக பொள்ளாச்சி வழியாக பழனி செல்லவிருக்கும் தமிழக ஆளுநர் ஆர்.என். ரவியை தபால்காரர் உடையில் கெட் அவுட் மிஸ்டர் ஆர். என். ரவி என வாசகம் கொண்ட சுவரொட்டிகள் பொள்ளாச்சி நகரப் பகுதிகளில் நகர திமுக சார்பில் ஒட்டப்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
நாம் அனைவரும் தமிழர்களாக, ஒற்றுமையாக வாழ திமுகவை ஆதரியுங்கள் - எம்.பி.கனிமொழி பேச்சு
முன்னதாக கோவை வரும் ஆளுநர் ரவிக்கு எதிராக கருப்பு கொடி காட்ட வாய்ப்பு உள்ளதால் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில் ஆளுநருக்கு எதிராக சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து தகவல் அறிந்து வந்த பொள்ளாச்சி காவல்துறையினர் ஒட்டப்பட்ட போஸ்டர்களை அப்புறப்படுத்தினர்.