அண்ணாமலை மீது நடவடிக்கை எடுங்கள்..! மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு திமுக எம்பி திடீர் கடிதம்

By Ajmal Khan  |  First Published Apr 20, 2023, 10:27 AM IST

 20 ஆயிரத்துக்கு மேல் பணமாக கொடுப்பதும், வாங்குவதும் தண்டனைக்குரிய குற்றம் என தெரிவித்துள்ள கலாநிதி வீராசாமி, எனவே  அண்ணாமலை மீது வருமான வரி சட்டத்தின் கீழ் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என நிர்மலா சீதாராமனுக்கு கடிதம் எழுதியுள்ளார்.
 


திமுகவினரின் சொத்து பட்டியல்

திமுக ஆட்சி அமைந்தது முதல் பாஜக இடையே மோதல் ஏற்பட்டு வருகிறது. ஒருவர் மீது ஒருவர் மாறி, மாறி புகார் தெரிவித்து வருகின்றனர். முதலமைச்சரின் துபாய் பயணம் முதல் மெட்ரோ ரயில் திட்டம் வரை ஊழல் நடைபெற்றதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை புகார் தெரிவித்து இருந்தார்.  இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் திமுகவும் அண்ணாமலை மீது சரமாரியாக புகார் கூறிவருகிறது. மேலும் அண்ணாமலை கட்டியுள்ள ரபேல் வாட்ச்க்கான பில்லை எங்கே என திமுக கேட்டது. இதனால் அதிர்ச்சி அடைந்த அண்ணாமலை, ரபேல் வாட்ச் பில்போடு திமுகவினரின் ஊழல் பட்டியலையும் வெளியிடுவதாக கூறி பதிலடி கொடுத்தார். இதனையடுத்து கடந்த வாரம் திமுக நிர்வாகிகள் 17 பேரின் சொத்து பட்டியலை அண்ணாமலை வெளியிட்டார்.

Latest Videos

அண்ணாமலைக்கு முன் கைகட்டி நிற்கணுமா..? தேர்தல்ல வெற்றி பெறாதவர் தேர்தல் பொறுப்பாளரா.? மாஜி முதல்வர் ஆதங்கம்

வீட்டு வாடகை கொடுப்பதே நண்பர்கள் தான்

அப்போது செய்தியாளர்கள் மத்தியில் பேசும் போது தனக்கு வீடு, கார், தனது 3 உதவியாளர்களுக்கு ஊதியம் போன்றவற்றை தனது நண்பர்கள் தான் வழங்குவதாக தெரிவித்து இருந்தார். மேலும் தனது கோவையை சேர்ந்த நண்பரிடம் இருந்து 3 லட்சம் ரூபாய் கொடுத்து ரபேல் வாட்ச் வாங்கியதாவும் கூறினார். இந்தநிலையில்  திமுக எம்பி. கலாநிதி வீராசாமி, மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மீது புகார் தெரிவித்து கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில்,  தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தன் நண்பர்களிடமிருந்து மாதத்திற்கு 7 லட்சம் ரூபாய் முதல் 8 லட்சம் ரூபாய் வரை பெற்று குடும்ப செலவுகளுக்கு பயன்படுத்துவதாக தெரிவித்துள்ளார். மேலும் கடந்த ஒன்றரைஆண்டுகளாக இதற்காக அவர் 1 கோடியே 76 லட்சம் ரூபாய் வாங்கியுள்ளதாக தெரிகிறது.  

நிர்மலா சீதாராமனுக்கு கடிதம்

மேலும் அண்ணாமலை தன் கையில் அணிந்திருக்கும் ரபேல் கடிகாரத்தை  கோவையை சேர்ந்த சேரலாதன் ராமகிருஷ்ணன் என்பவரிடம்  3 லட்சம் ரூபாய் பணமாக கொடுத்து வாங்கியதாகவும் தெரிவித்துள்ளார். வருமான வரிச் சட்டத்தின் கீழ் ரூபாய் 20 ஆயிரத்துக்கு மேல் பணமாக கொடுப்பதும், வாங்குவதும் தண்டனைக்குரிய குற்றம் என கலாநிதி வீராசாமி தெரிவித்துள்ளார். இதனால் அண்ணாமலை மீது வருமான வரி சட்டத்தின் கீழ் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர்  நிர்மலா சீதாராமனுக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில் வலியுறுத்தியுள்ளார்.

இதையும் படியுங்கள்

தமிழகத்தில் அதிமுக- பாஜக கூட்டணி தொடருமா..? அண்ணாமலை- எடப்பாடி பழனிசாமி சென்னையில் இன்று முக்கிய ஆலோசனை

click me!