அண்ணாமலைக்கு முன் கைகட்டி நிற்கணுமா..? தேர்தல்ல வெற்றி பெறாதவர் தேர்தல் பொறுப்பாளரா.? மாஜி முதல்வர் ஆதங்கம்

By Ajmal Khan  |  First Published Apr 20, 2023, 8:45 AM IST

நாங்கள் அமைச்சராக இருந்தபோது ஐபிஎஸ் அதிகாரியாக இருந்த அண்ணாமலை முன்பாக ஏதோ குழந்தைகளை போல பின்வரிசையில் தங்களை அமர்த்தப்படியிருந்ததாக முன்னாள் முதல்வர் ஜெகதீஷ் ஷெட்டர்  வேதனை தெரிவித்தார்


சூடு பிடிக்கும் கர்நாடக தேர்தல்

கர்நாடக மாநில சட்டமன்ற தேர்தல் பரபரப்பு கட்டத்தை அடைந்துள்ளது. அடுத்த மாதம் 10 ஆம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளதையொட்டி காங்கிரஸ் மற்றும் பாஜக சார்பாக வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டு வருகிறது. இந்தநிலையில் பாஜகவில் பல ஆண்டுகளாக பொறுப்பில் உள்ள தலைவர்களுக்கும் முன்னாள் முதலமைச்சர்களுக்கும் போட்டியிட வாய்ப்பு வழங்காமல் புறக்கணிக்கப்பட்டது பாஜகவினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்பட்டுத்தியுள்ளது. . இதனால் அதிருப்தி அடைந்த நிர்வாகிகள் கட்சிக்கு எதிராக குரல் எழுப்பி வருகின்றனர். இந்தநிலையில் முன்னாள் முதல்வர் ஜெகதீஷ் ஷெட்டாருக்கு  போட்டியிட வாய்ப்பு வழங்கப்படவில்லை. இதனால் அதிருப்தி அடைந்த அவர் கடந்த 3 தினங்களுக்கு முன்பாக பாஜகவில் இருந்து விலகி காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். ஜெகதீஷ் ஷெட்டர் காங்கிரஸ் கட்சியில் இணைந்தது பாஜகவினர் மத்தியில் அதிர்ச்சியை அடையவைத்துள்ளது. 

Tap to resize

Latest Videos

ஸ்டார் தலைவர்களை களமிறக்கும் பாஜக! அனல் பறக்கும் கர்நாடக தேர்தல் பிரச்சாரம்!

பாஜகவில் இருந்து விலகிய மாஜி முதலமைச்சர்

ஜெகதீஷ் ஷெட்டர் 1994 ஆம் ஆண்டு முதல் முறையாக சட்டசபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். அதன்பிறகு, தொடர்ந்து நான்கு முறை ஹூப்ளி கிராமப்புற தொகுதியில் இருந்து எம்எல்ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.  1999 ஆம் ஆண்டில், அவர் தனது இரண்டாவது சட்டமன்ற காலத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டபோது, எஸ்.எம். கிருஷ்ணா கர்நாடக முதல்வராக இருந்தபோது சட்டமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இதனை தொடர்ந்து ஒரு ஆண்டு காலம் முதலமைச்சர் பொறுப்பும் வகித்துள்ளார்.  பாஜகவில் முக்கிய பொறுப்பில் இருந்த ஜெகதீஷ் ஷெட்டர் காங்கிரஸ் கட்சியில் இணைந்தது ஏன் என விளக்கம் அளித்துள்ளார். தன்னை போல் கட்சியில் 6, 7 முறை போட்டியிட்டு வெற்றிப்பெற்றவர்கள் ஏராளம், ஆனால் ஒரு தேர்தலிலும் வெற்றிப்பெறாத அண்ணாமலையை, கட்சி பொறுப்பாளராக்கியது என கேள்வி எழுப்பினார். 

அண்ணாமலைக்கு முன் கை கட்டி நிற்கணுமா.?

மேலும் சமீபத்தில் பாஜகவின் சார்பாக நடைபெற்ற நாங்கள் கோர் கமிட்டி கூட்டத்தில் அண்ணாமலை முன் வரிசையில் அமர்ந்திருந்த போது முன்னாள் முதலமைச்சர்களான நானும் சதானந்த கவுடாவும் பின்வரிசை உறுப்பினர்களாக அமர்ந்திருந்தோம்.  தாங்கள் அமைச்சராக இருந்தபோது ஐபிஎஸ் அதிகாரியாக இருந்த அண்ணாமலை முன்பாக ஏதோ குழந்தைகளை போல அமர்த்தப்படியிருந்ததாக வேதனை தெரிவித்தார். போட்டியிட்ட தொகுதியிலேயே வெற்றி பெற முடியாத அண்ணாமலை தமிழகத்தில் அதிமுகவுடன் கூட்டணி வைத்ததால் 4 தொகுதிகளில் மட்டுமே பாஜக வெற்றி பெற்றதாகவும் விமர்சித்தார். 

இதையும் படியுங்கள்

Karnataka Election 2023 : கர்நாடக பாஜகவின் முகம்.. காங்கிரஸ் கட்சிக்கு தாவல் - யார் இந்த ஜெகதீஷ் ஷெட்டர்?

click me!