திமுகவின் 15-வது உட்கட்சித் தேர்தல்.. எந்த பிரச்சனையும் இல்லாமல் அமைதியா நடத்துங்க.. துரைமுருகன் வேண்டுகோள்.!

By vinoth kumarFirst Published Aug 22, 2022, 12:33 PM IST
Highlights

திமுகவின் 15-வது உட்கட்சித் தேர்தல் நடைபெற இருப்பதால், சுமூகமாக நடைபெற நிர்வாகிகள் ஒத்துழைக்குமாறு திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

திமுகவின் 15-வது உட்கட்சித் தேர்தல் நடைபெற இருப்பதால், சுமூகமாக நடைபெற நிர்வாகிகள் ஒத்துழைக்குமாறு திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதுதொடர்பாக திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில்;- திமுகவின் 15வது உட்கட்சித்தேர்தல் சென்னையைச் சேர்ந்த மாவட்டங்களின் ஒன்றியங்களுக்கான தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. ஒன்றியங்களுக்கான அவைத்தலைவர், செயலாளர், பொருளாளர், துணைச் செயலாளர்கள் மூன்று பேர், மாவட்ட பிரதிநிதிகளாக மூன்று பேர், 11 பேர் கொண்ட செயற்குழு உறுப்பினர்களையும், தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் நடைபெற இருப்பதாக தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க;- இன்னும் நிறைய சம்பவங்களை செய்யப் போறோம், காத்திருங்கள்... ஸ்டாலின் அறிவிப்பால் அலறும் சென்னை!!!

வேட்புமனுக்களை மாவட்டச் செயலாளர், பொறுப்பாளரிடமோ அல்லது தலைமைக் கழக பிரதிநிதியிடமோ பெற்று ஆகஸ்ட் 24ம் தேதி அளிக்க வேண்டும் என்றும் போட்டியிருக்கும் இடங்களில் ஆகஸ்ட் 25ம் தேதி தேர்தல் நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்தல் நடைபெறும் நாட்களில் பிரச்சினைகள் ஏதுமின்றி சுமூகமாக தேர்தல் நடைபெற நிர்வாகிகள் ஒத்துழைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

இதையும் படிங்க;-  5 ஆண்டுகளுக்கு முன்பு இதே நாள்...! ஓபிஎஸ்- இபிஎஸ் அணி எப்படி இருந்தது தெரியுமா- மைத்ரேயன் தகவல்

சென்னை வடகிழக்கு மாவட்டத்திற்கு உட்பட்ட புழல், சோழவரம் தெற்கு, வில்லிவாக்கம் வடக்கு, சென்னை தெற்கு மாவட்டத்திற்குட்பட்ட தாமஸ்மலை தெற்கு, வில்லிவாக்கம் தெற்கு ஒன்றியங்களில் தேர்தல் நடைபெறும் என அறிவித்துள்ளார்.

click me!