காவல்துறையைக் கையில் வைத்திருக்கும் முதல்வரே இதற்கு என்ன பதில் சொல்லப் போறீங்க? போட்டு தாக்கும் தினகரன்.!

By vinoth kumar  |  First Published Aug 22, 2022, 11:22 AM IST

தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் அநியாயமாக கொல்லப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்க வேண்டுமென்றால், விசாரணை அறிக்கையை முழுமையாக வெளியிடுவதுடன், அதில் குற்றம் சாட்டப்பட்டிருப்பவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தூத்துக்குடி ஸ்டெர்லைட் போராட்டத்தில் 13 பேர் கொடூரமாக சுட்டுக் கொல்லப்பட்டது குறித்த நீதிபதி அருணா ஜெகதீசன் விசாரணை அறிக்கையை வெளியிடாமல் திமுக அரசு மவுனம் காப்பது பலத்த சந்தேகத்தை ஏற்படுத்துகிறது என டிடிவி. தினகரன் கூறியுள்ளார்.

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூடக் கோரி கடந்த 2018ம் ஆண்டு 10க்கும் மேற்பட்ட கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். போராட்டத்தின் 100வது நாளில் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நோக்கி பிரம்மாண்ட பேரணியை பொதுமக்கள் நடத்தினர். ஆட்சியர் அலுவலகத்தை அடைந்த போது வன்முறையில் ஈடுபட்டதாகக் கூறி போராட்டக்கார்கள் மீது போலீசார் கண்மூடித்தனமாக துப்பாக்கிச் சூடு நடத்தினர். இந்த துப்பாக்கிச் சூட்டில் அப்பாவி பொதுமக்கள் 13 பேர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனையடுத்து, வன்முறை குறித்து விசாரணை நடத்தி அறிக்கை அளிக்குமாறு உயர்நீதிமன்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் அப்போதைய அதிமுக அரசு ஒரு நபர் விசாரணை ஆணையம் அமைத்தது. 

Tap to resize

Latest Videos

இதையும் படிங்க;- இபிஎஸ்க்கு சி.எம் பதவியை முன்பே ஜெயலலிதா கொடுத்திருந்தால்..! என்ன நடந்திருக்கும் தெரியுமா...? கோவை செல்வராஜ்

இதுகுறித்து விசாரிக்க நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஆணையம் அமைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டு வந்த நிலையில் அண்மையில் அவர் அரசிடம் அறிக்கை தாக்கல் செய்தார். அதில், ஆட்சியராக இருந்த வெங்கடேஷ் உட்பட 17 போலீசார் மீது நடவடிக்கை எடுக்க அருணா ஜெயதீசன் ஆணையம் தமிழக அரசுக்கு பரிந்துரை செய்துள்ளதாக தகவல் வெளியானது. இந்நிலையில்,  நீதிபதி அருணா ஜெகதீசன் விசாரணை அறிக்கையை வெளியிடாமல் திமுக அரசு மவுனம் காப்பது பலத்த சந்தேகத்தை ஏற்படுத்துகிறது என டிடிவி. தினகரன் கூறியுள்ளார்.

இதுகுறித்து அமமுக கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி. தினகரன் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில்;- தூத்துக்குடி ஸ்டெர்லைட் போராட்டத்தில் 13 பேர் கொடூரமாக சுட்டுக் கொல்லப்பட்டது குறித்த நீதிபதி அருணா ஜெகதீசன் விசாரணை அறிக்கையை வெளியிடாமல் திமுக அரசு மவுனம் காப்பது பலத்த சந்தேகத்தை ஏற்படுத்துகிறது.

இதையும் படிங்க;- தூத்துக்குடி துப்பாக்கி சூடு அறிக்கை! மனதை கலங்க வைக்கும் ஷாக்கிங் நியூஸ்! ஒரே காவலர் 17 முறை துப்பாக்கி சூடு

இந்த விசாரணை அறிக்கையில், காவல்துறை அதிகாரிகள் பலர் மீது குற்றம் சாட்டப்பட்டிருப்பதாகவும், அவர்களை திமுக அரசு காப்பாற்ற முயல்வதாகவும் வெளிவரும் செய்திகள் உண்மையா? காவல்துறையைக் கையில் வைத்திருக்கும் முதலமைச்சர் ஸ்டாலின் இதற்கு என்ன பதில் சொல்லப்போகிறார்?

தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் அநியாயமாக கொல்லப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்க வேண்டுமென்றால், விசாரணை அறிக்கையை முழுமையாக வெளியிடுவதுடன், அதில் குற்றம் சாட்டப்பட்டிருப்பவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இதையும் படிங்க;-  ஹாஸ்டலில் மருத்துவக் கல்லூரி மாணவி தூக்கிட்டு தற்கொலை.. சிக்கிய கடிதம்.. வெளிவந்த அதிர்ச்சி தகவல்..!

திமுக அரசு இதனை செய்யுமா? அல்லது வழக்கம் போல இப்பிரச்னையிலும் இரட்டை வேடம் போடப் போகிறார்களா? என டிடிவி. தினகரன் கூறியுள்ளார்.

click me!