5 ஆண்டுகளுக்கு பிறகு ஜெயா டிவிக்கு சிறப்பு பேட்டியளித்த ஓபிஎஸ்..! என்ன சொல்லிருக்காருனு தெரியுமா..?

By Ajmal KhanFirst Published Aug 22, 2022, 9:41 AM IST
Highlights

அதிமுகவில் ஒற்றை தலைமை மோதல் ஏற்பட்டுள்ள நிலையில், சசிகலாவின் ஆதரவு தொலைக்காட்சியாக இருக்கும் ஜெயா டிவிக்கு சுமார் 5 ஆண்டுகளுக்கு பிறகு ஓ.பன்னீர் செல்வம் சிறப்பு பேட்டியளித்து இருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஜெயலலிதா மறைவும் - அதிமுகவும்

அதிமுகவின் அதிகாரப்பூர்வ தொலைக்காட்சியாக ஜெயாடிவியும், நாளிதழாக நமது எம்ஜிஆரும் இருந்து வந்தது. இந்த இரண்டில் மட்டுமே அதிமுகவின் அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகும், அதிமுக வேட்பாளர் பட்டியல் ஜெயா டிவியை பாரத்து தான் அதிமுகவினர் மட்டுமில்லாமல்  தமிழக மக்களே தெரிந்து கொள்வார்கள், இதே போல அமைச்சரைவை மாற்றம், அதிமுக நிர்வாகிகள் நீக்கம் போன்ற செய்திகளும் ஜெயா டிவியில் வெளியான பிறகு மற்ற தொலைக்காட்சியில் வெளியாகும். இந்தநிலையில் கடந்த 2016 ஆம் ஆண்டு உடல் நிலை பாதிக்கப்பட்ட ஜெயலலிதா மரணம் அடைந்தார். இதனையடுத்து தர்மயுத்தம் தொடங்கிய ஓபிஎஸ் சசிகலா, டிடிவி தினகரனுக்கு எதிராக குரல் கொடுத்திருந்தார். இதன் காரணமாக ஓபிஎஸ் - சசிகலா விற்குள் பிளவு ஏற்பட்டது. இதனையடுத்த சொத்து குவிப்பு வழக்கில் தீர்ப்பு வந்ததால் சிறைக்கு செல்லும் நிலை சசிகலாவிற்கு ஏற்பட்டது. அப்போது முதலமைச்சர் பொறுப்பை எடப்பாடி பழனிசாமியிடம் சசிகலா வழங்கினார்.இதனையடுத்து சில மாதங்களிலேயே ஓபிஎஸ் அணியோடு இபிஎஸ் அணி இணைந்ததால், அதிமுகவில் இருந்து சசிகலா மற்றும் தினகரன் கழட்டி விடப்பட்டனர்.

இபிஎஸ்க்கு சி.எம் பதவியை முன்பே ஜெயலலிதா கொடுத்திருந்தால்..! என்ன நடந்திருக்கும் தெரியுமா...? கோவை செல்வராஜ்

ஜெயா டிவிக்கு சிறப்பு பேட்டி

இதன் காரணமாக சசிகலாவின் கட்டுப்பாட்டிற்குள் ஜெயா டிவி வந்தது. அதிமுகவிற்கு ஆதரவாக செயல்படுட்டு வந்த ஜெயா டிவி அதிமுகவிற்கு எதிராகவே செய்தி செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது. தற்போது டிடிவி தினகரன் மற்றும் சசிகலா ஆதரவு செய்திகளை ஜெயா தொலைக்காட்சி வெளியிட்டு வருகிறது. தற்போது அதிமுகவில் ஒற்றை தலைமை மோதல் காரணமாக ஓபிஎஸ்- இபிஎஸ் என இரண்டாக பிளவு பட்டுள்ளது. இதனையடுத்து அதிமுக பொதுக்குழு தொடர்பாக நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு ஓபிஎஸ்க்கு ஆதரவாக வந்த நிலையில், அனைவரும் ஓன்றினைந்து செயல்பட வேண்டும் என ஓ.பன்னீர் செல்வம் வலியுறுத்தி இருந்தார். இதற்க்கு இபிஎஸ் மறுப்பு தெரிவித்திருந்த நிலையில், டிடிவி தினகரனோ ஆதரவு தெரிவித்து இருந்தார். இந்தநிலையில் ஜெயா டிவிக்கு சுமார் 5 ஆண்டுகளுக்கு பிறகு அதிமுக ஒருங்கிணைப்பாளர் சிறப்பு பேட்டியளித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவால் தொடங்கப்பட்ட ஜெயா டிவி தனது 24 ஆம் ஆண்டு தினத்தை இன்றைய தினம் கொண்டாடி வருகிறது. இதற்காக பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களிடம் ஜெயா டிவி வாழ்த்து பெற்றுள்ளது. அந்த வகையில்

அதிமுக அழிவு பாதைக்கு செல்வதற்கு எட்டப்பன் கே.பி முனுசாமி தான் காரணம்...! அதிமுக நிர்வாகி ஆவேச கருத்து

சசிகலாவோடு இணைந்து பயணிக்க திட்டமா.?

ஜெயா டிவியின் 24 ஆண்டு விழாவிற்க்காக அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் சிறப்பு பேட்டியளித்துள்ளார். அதில், புரட்சி தலைவி அம்மா அவர்களால் 1999 ஆம் ஆண்டு துவங்கப்பட்ட ஜெயா தொலைக்காட்சி,  23 ஆண்டுகள் தனது வெற்றி பயணத்தை தொடர்ந்து வருவதாக தெரிவித்துள்ளார் மேலும்  தமிழகத்தில் மட்டுமில்லாமல் இந்தியாவின் அனைத்து நிலைகளிலும் ஜெயா தொலைக்காட்சி  முன்னனி தொலைக்காட்சியாக இருப்பதாக தெரிவித்துள்ளார். மேலும் சமூக பொருளாதார நிலை, அன்றாட மக்களின் வாழ்க்கை நிலை போன்ற செய்திகளையும் வழங்கி வருவதாக கூறியுள்ளார். ஜெயா தொலைக்காட்சியில் பணியாற்றும் ஊழியர்களுக்கும் தனது வாழ்த்துகளை ஓபிஎஸ் தெரிவித்துள்ளார். தற்போது அதிமுகவில் ஓபிஎஸ்- இபிஎஸ் என பிரிவு ஏற்பட்டுள்ளதால்  ஓபிஎஸ் சசிகலா மற்றும் தினகரனோடு இணைந்து பணியாற்ற இருப்பதற்கு இது ஆரம்ப புள்ளி என்றே கூறப்படுகிறது.

இதையும் படியுங்கள்

அதிமுக பொதுக்குழு மேல் முறையீட்டு வழக்கு இன்று விசாரணை... ! ஓபிஎஸ்..? இபிஎஸ்..? வெல்வது யார்...

 

click me!