முன்னாள் துணை மேயர் முதல் 3 கவுன்சிலர்கள் மீது தகுதி நீக்க நடவடிக்கை.. நெல்லையில் பரபரப்பு

By Raghupati RFirst Published Oct 15, 2022, 9:18 PM IST
Highlights

நெல்லை மாநகராட்சியில் முன்னாள் துணை மேயர் உள்பட மூன்று கவுன்சிலர்கள் மீது தகுதி நீக்கி நடவடிக்கை பாய்கிறது ? தொடர்ந்து மூன்று கூட்டங்களில் பங்கேற்காததால் விளக்கம் கேட்டு மூன்று பேருக்கும் ஆணையர் கடிதம் அனுப்பி உள்ளார்.

நெல்லை மாநகராட்சியில் மொத்தம் 55 வார்டுகள் உள்ளன. சமீபத்தில் நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில் நெல்லையில் அதிமுக நான்கு இடங்களில் மட்டும் வெற்றி பெற்றனர். இதில் நெல்லை மாநகராட்சியின் முன்னாள் துணை மேயர் ஜெகநாதன் 30வது வார்டிலும், இரண்டாவது வார்டில் மாமன்ற உறுப்பினராக அதிமுகவை சேர்ந்த முத்துலட்சுமி என்பவரும், 31 வது வார்டில் மாமன்ற உறுப்பினராக அமுதா என்பவரும், 28 வது வார்டில் அதிமுகவை சேர்ந்த சந்திரசேகர் என்பவர் மாமன்ற உறுப்பினராகவும் தேர்வு செய்யப்பட்டனர்.

55 வார்டுகளில் நான்கு பேர் மட்டுமே அதிமுகவை சேர்ந்தவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இந்த நிலையில் மாநகராட்சி சட்டம் 1981 பிரிவு 51 கீழ் ஒன்றின்படி தொடர்ச்சியாக மூன்று கூட்டங்களில் கலந்து கொள்ளாத மாமன்ற உறுப்பினரை தகுதி நீக்கம் செய்ய வழிவகை செய்து சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இதையும் படிங்க..அரசியலை விட்டுட்டு விவசாயம் பண்ண முடியும்.. நீங்க பண்ண முடியுமா ? முதல்வரை மறைமுகமாக விளாசிய அண்ணாமலை

அதிமுகவை சேர்ந்த முன்னாள் துணை மேயரும் தற்போதைய மாமன்ற உறுப்பினருமான ஜெகநாதன் மற்றும் இரண்டாவது வார்டு மாமன்ற உறுப்பினர் முத்துலட்சுமி ஆகியோர் கடந்த ஜூலை மாதம் 29ஆம் தேதி நடைபெற்ற கூட்டத்திலும் ஆகஸ்ட் மாதம் 24 ஆம் தேதி நடைபெற்ற கூட்டத்தில் செப்டம்பர் மாதம் 21ஆம் தேதி நடைபெற்ற கூட்டத்திலும் தொடர்ச்சியாக கலந்து கொள்ளவில்லை என்பது தெரியவந்துள்ளது.

நெல்லை மாநகராட்சிக்கு பொருந்தும் கோயம்புத்தூர் மாநகராட்சி சட்டம் 1981 பிரிவு ஒன்றின்படி அவர்களை தகுதி நீக்கம் செய்வதற்கு ஆளாகின்றனர். மேலும் சட்ட விதி 59ன் கீழ் நாலு மாமன்ற உறுப்பினர்களை மீண்டும் மாமன்ற உறுப்பினர்களாக செயல்பட மாமன்ற கூட்டத்தில் முடிவு செய்வதற்கும் வழிவகை உள்ளதால், வரும் 20ஆம் தேதி நடைபெறக்கூடிய கூட்டத்தில் அதிமுகவை சேர்ந்த மாமன்ற உறுப்பினர்களை தகுதி நீக்கம் செய்வது தொடர்பான தீர்மானம் முன்மொழியப்பட்டு அதற்குரிய விவாதங்கள் நடத்தப்பட்டு முடிவு எடுக்கப்படும் என தெரிகிறது.

இதையும் படிங்க..எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக எம்.எல்.ஏக்கள் கூட்டம்.. என்ன செய்யப்போகிறார் ஓபிஎஸ்?

இதற்கான அறிவிப்பை மாநகராட்சி சார்பில் சம்பந்தபட்ட மமான்ற உறுப்பினர்களுக்கு  தபால் மூலம் தகவல்  அனுப்பப்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது . இது குறித்து நெல்லை மாநகராட்சி ஆணையர் சிவ கிருஷ்ணமூர்த்தியிடம் கேட்டபோது மாமன்ற உறுப்பினர்கள் மூன்று கூட்டத்திற்கு வராமல் இருந்தால் சட்டப்படி அவர்களுக்கு விளக்கம் கேட்டு கடிதம் அனுப்பப்படும். அந்த வகையில் தற்போது கூட்டத்தில் பங்கேற்காத அதிமுக உறுப்பினர்களுக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது கடிதம் அனுப்புவது மட்டும் தான் எனது பொறுப்பு அவர்களை தகுதி நீக்கம் செய்வது கூட்டத்தில் மேயர் தலைமையில் கவுன்சில் தான் முடிவெடுக்கும்’ என்று தெரிவித்தார்.

இதையும் படிங்க..பள்ளி காதல்..பிரேக்அப் செஞ்சா! படுகொலை செய்யப்பட்ட சத்யா - சதீஷ் குடும்பத்தின் மறுபக்கம்

click me!