விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவனுக்கு பதிலடி கொடுத்துள்ளார் இயக்குனர் பேரரசு.
விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் இந்து சமய அறநிலையத் துறையை இரண்டாக பிரிக்க வேண்டும் என்று சமீபத்தில் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்திருந்தார். சைவம், வைணவம் என்று இரண்டாக பிரிக்க வேண்டும் என்று கூறினார்.
திருமாவளவனின் தமிழக அரசியலில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. திருமாவளவனின் இந்த கருத்துக்கு பாஜக தலைவர்கள் மற்றும் இந்து அமைப்பினர் என பலரும் கண்டனம் தெரிவித்தனர்.
இந்த நிலையில், இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசினார் பாஜகவை சேர்ந்தவரும், திரைப்பட இயக்குனருமான பேரரசு. அப்போது பேசிய அவர், ‘திருமாவளவன் சொல்வதுபோல இந்து மதத்தை சைவம், வைணவம் என்று பிரித்துவிட்டு, தமிழகத்தை சேர, சோழ, பாண்டிய நாடுகள் என்று பிரித்து விடுங்கள். மீண்டும் தெரு பெயர்களோடு சாதிப் பெயரையும் சேர்த்து விடுங்கள். சைவ, வைணவ காலத்தில் கிறிஸ்தவம், இஸ்லாம் இல்லை.
இதையும் படிங்க..அரசியலை விட்டுட்டு விவசாயம் பண்ண முடியும்.. நீங்க பண்ண முடியுமா ? முதல்வரை மறைமுகமாக விளாசிய அண்ணாமலை
அந்த மதங்களை இந்தியாவில் இருந்து அகற்றி விடுங்கள். முக்கியமாக அப்போது திராவிடம் என்ற வார்த்தையே தமிழர்களிடம் இல்லை. அதனால் முதலில் அந்த வார்த்தையை எங்கும் இல்லாமல் செய்து விடுங்கள். இந்தியாவையும் பாகிஸ்தானையும் இணைத்து விடுங்கள். வைணவம், சைவம் என்ற விஷயங்களை மக்களே மறந்து, இந்து என்ற ஒற்றுமைக்குள் வந்துவிட்டார்கள். சாதி ஒழிய வேண்டும்.
சமூக நீதி வேண்டும் என்று முற்போக்காக பேசும் திருமாவளவனின் சிந்தனை அதைவிட பிற்போக்காக மாறி விட்டது. திருமாவளவனிடம் சுற்றி வளைத்து பேச விரும்பவில்லை நேரடியாகவே கேட்கிறேன். நீங்கள் இந்துவா ? இல்லை என்றால் கிறிஸ்தவரா ? இல்லை, எனக்கு எந்த மதமும் இல்லை. நான் நாத்திகர் என்றால் அதையும் வெளிப்படையாக சொல்லுங்கள்.
இதையும் படிங்க..எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக எம்.எல்.ஏக்கள் கூட்டம்.. என்ன செய்யப்போகிறார் ஓபிஎஸ்?
பிறகு இந்து மதத்தைப் பற்றி ஆராய்ச்சி செய்வதும், கேலி கிண்டல் செய்வதும் இருக்கட்டும். ஆ.ராசா, சீமான் ஆகியோரிடமும் இதையே கேட்கிறேன். நீங்கள் என்ன மதம் என்று தெரியாமல் இந்து மதத்தை இழிவுப்படுத்தக் கூடாது. இதுவரை பொறுத்துக் கொண்டோம். இனி பொறுக்க மாட்டோம்’ என்று மிகவும் கடுமையாக பேசினார் இயக்குனர் பேரரசு.
இதையும் படிங்க..பள்ளி காதல்..பிரேக்அப் செஞ்சா! படுகொலை செய்யப்பட்ட சத்யா - சதீஷ் குடும்பத்தின் மறுபக்கம்