அந்த விஷயத்தை பத்தி பேசவே இல்லை.. முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறிய பரபரப்பு தகவல்..!

By vinoth kumar  |  First Published Oct 17, 2022, 6:42 AM IST

திமுகவுக்கு சார்பாக ஓபிஎஸ் நடந்துகொண்டதும் எல்லோருக்கும் தெரியும். ஓபிஎஸ், திமுக இணைந்த கரங்களாக செயல்படுவது உலகத்திற்கே தெரியும். எடப்பாடி பழனிசாமி பேச்சிலும், ஓ.பன்னீர்செல்வம் பேச்சிலும், யார் திமுக அரசை விமர்சிக்கிறார்கள் என்பதை தொண்டர்கள் புரிந்து கொண்டிருப்பார்கள். 


ஓ.பன்னீர்செல்வத்தின் நீக்கம் நீதிமன்றத்தால் உறுதி செய்யப்பட்டதால் அது பற்றி ஆலோசனை கூட்டத்தில் விவாதிக்கவில்லை என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.

பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் இன்று கூடுகிறது. இதையொட்டி அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் நேற்றிரவு நடந்தது. இதில், இடைக்கால பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடந்த கூட்டத்தில், அவரது அணி ஆதரவு எம்எல்ஏக்கள் கலந்து கொண்டனர்.

Tap to resize

Latest Videos

இதையும் படிங்க;- எடப்பாடி அருகே சீட்டில் அமர்வீர்களா.? எடப்பாடி பழனிசாமி குறித்த கேள்விக்கு ஓபிஎஸ் சொன்ன அதிரடி பதில்!

undefined

இதில், சட்டப்பேரவை கூட்டத்தில் எவ்வாறு நடந்து கொள்வது. மக்கள் நலன்சார்ந்த பிரச்னைகளில் எவற்றை எழுப்ப வேண்டும் என்று அப்போது எடப்பாடி பழனிசாமி எம்எல்ஏக்களுக்கு அறிவுரை வழங்கினார். இந்த கூட்டம் முடிந்தபிறகு செய்தியாளர்களை இபிஎஸ் சந்திப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் காரில் ஏறி கிளம்பி சென்றார். இதனையடுத்து, செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்;- ஓ.பன்னீர்செல்வத்தின் நீக்கம் நீதிமன்றத்தால் உறுதி செய்யப்பட்டதால் அது பற்றி ஆலோசனை கூட்டத்தில் விவாதிக்கவில்லை. 

திமுகவுக்கு சார்பாக ஓபிஎஸ் நடந்துகொண்டதும் எல்லோருக்கும் தெரியும். ஓபிஎஸ், திமுக இணைந்த கரங்களாக செயல்படுவது உலகத்திற்கே தெரியும். எடப்பாடி பழனிசாமி பேச்சிலும், ஓ.பன்னீர்செல்வம் பேச்சிலும், யார் திமுக அரசை விமர்சிக்கிறார்கள் என்பதை தொண்டர்கள் புரிந்து கொண்டிருப்பார்கள். சட்டப்பேரவை தலைவர் மாண்போடு நடந்து கொள்வார் என நம்புகிறோம் என ஜெயக்குமார் கூறியுள்ளார். 

இதையும் படிங்க;-  பாஜக தலையீடு தவறானது.. பாஜகவை பொளந்து கட்டிய கே.பி முனுசாமி! அதிமுக வட்டாரங்களில் பரபரப்பு

click me!