அவங்களோட போராட்டம் சாலையோர தமாஷ்… திமுகவை விளாசிய ஹெச்.ராஜா!!

By Narendran SFirst Published Oct 16, 2022, 11:58 PM IST
Highlights

திமுகவின் இந்தி எதிர்ப்பு போராட்டம் என்பது சாலையோர தமாஷ் என்று பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா கடுமையாக விமர்சித்துள்ளார். 

திமுகவின் இந்தி எதிர்ப்பு போராட்டம் என்பது சாலையோர தமாஷ் என்று பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா கடுமையாக விமர்சித்துள்ளார். இதுக்குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழை வெறும் பேசு மொழியாக மட்டுமே திமுக மாற்றியுள்ளது. தமிழின் பெருமையை உணர்ந்து செயல்படும் கட்சி பாஜக மட்டுமே. திமுக நிர்வாகிகள் அனைவரும் சிபிஎஸ்சி கல்விக் கூடம் நடத்தி வரும் நிலையில் ஏன் சமச்சீர் கல்விக்கூடம் நடத்தவில்லை. இந்தி படிக்க வைக்கும் திமுகவின் நிர்வாகிகள் பட்டியலை வெளியிட்டால் அவர்கள் முகத்தை எங்கே வைப்பார்கள். அப்போது  திமுகவின் தமிழ் வேடம் கலைக்கப்படும்.

இதையும் படிங்க: காங்கிரஸ் தலைவர் தேர்தல் : கர்நாடகாவில் இருக்கும் ராகுல் காந்தி எப்படி வாக்களிப்பார்? சர்ச்சையில் காங்கிரஸ்!

வெறுப்பு அரசியலை நடத்துவது தான் திராவிட மாடல். தமிழ் உணர்வை அழிக்க பயன்படுத்தும் சொல் தான் திராவிடம். திமுகவின் இந்தி எதிர்ப்பு போராட்டம் என்பது சாலையோர தமாஷ். ஏனென்றால், திமுகவின் மொழிக் கொள்கை எவ்வளவு விரோதமானது, தமிழ் மொழிக்கு எதிரானது என்பதை மக்கள் உணர்ந்திருக்கிறார்கள். கட சில நாட்களுக்கு முன்பு, தமிழ்நாட்டில் மின் கட்டண உயர்வு அறிவிக்கப்பட்டது. அதை திசை திருப்பவே, திமுக ஆர்ப்பாட்டம் நடத்தியது. தமிழை வெறும் பேச்சு மொழியாக மட்டுமே ஆக்கியிருக்கின்ற சக்தி, திராவிட இயக்கங்கள்.

இதையும் படிங்க: இந்தி பயிற்று மொழியா.? அமித்ஷா பதவி விலக வேண்டும்.. எச்சரித்த திருமாவளவன்

ஆனால், அதற்கு மாறாக பிரதமர் எங்கு போனாலும் தமிழ் பற்றிய பெருமைகளை எடுத்து கூறி வருகிறார். தமிழை பற்றிய பெருமைகளை உணர்ந்த பாஜகவை எதிர்ப்பதாக, மின்கட்டணத்தை மறைக்கவே திமுக ஆர்ப்பாட்டம் நடத்தியது. மத்திய அரசு தேசிய கல்விக் கொள்கையில் தெளிவாக கூறப்பட்டிருக்கிறது. அக்கொளையில் மாநில மொழிகளுக்கு முதல் முன்னுரிமை அளிக்கப்படுகிறது, அதற்கடுத்து ஆங்கிலம், மூன்றாவதாக இந்தியாவில் உள்ள ஏதாவது மொழிகளை கற்று கொள்ளலாம் குறிப்பிடப்பட்டுள்ளது. திமுகவின் தமிழ் வேஷம் என்று தெரிவித்தார். 

click me!