காங்கிரஸ் தலைவர் தேர்தல் : கர்நாடகாவில் இருக்கும் ராகுல் காந்தி எப்படி வாக்களிப்பார்? சர்ச்சையில் காங்கிரஸ்!

By Raghupati RFirst Published Oct 16, 2022, 10:54 PM IST
Highlights

காங்கிரஸ் கட்சியின் தலைவருக்கான தேர்தல் வாக்குப்பதிவு நாளை (அக்டோபர் 17ஆம் தேதி) காலை தொடங்குகிறது. 

கடந்த செப்டம்பர் 24 ஆம் தேதியும் வேட்புமனு தாக்கல் தொடங்கியது. வாக்கு எண்ணிக்கை வரும் அக்டோபர் 19ஆம் தேதி நடைபெறுகிறது.  காங்கிரஸ் தலைவர் பதவிக்கு அக்கட்சியின் மூத்த தலைவர்களான சசி தரூர், மல்லிகார்ஜுன கார்கே ஆகியோர் போட்டியிடுகின்றனர். 

நீண்ட ஆண்டுகள் கழித்து, காங்கிரஸ் தலைவர் பதவிக்கு காந்தி குடும்பம் அல்லாதவர்கள் போட்டியிடுவதால் மிகுந்த எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.  இந்தியாவின் ஒற்றுமைக்கான நடைபயணத்தை (பாரத் ஜோடா யாத்ரா) முன்னாள் காங்கிரஸ் தலைவரும், வயநாடு மக்களவை உறுப்பினருமான ராகுல் காந்தி மேற்கொண்டு வருகிறார்.

இதையும் படிங்க..கோவை தெற்கில் கமல்ஹாசனை தோற்கடித்து மாஸ் காட்டியவர் வானதி சீனிவாசன்.. பாஜக Vs மநீம மோதல் !

தற்போது அவர் கர்நாடகாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார்.  ராகுல்காந்தி தலைவர் தேர்தலில் வாக்களிப்பாரா என்ற கேள்வி எழுந்தது. இந்த நிலையில், காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளரான ஜெய்ராம் ராமேஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் அதற்கான பதிலை கூறியுள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், ‘ராகுல் காந்தி நாளைய காங்கிரஸ் தலைவர் தேர்தலில் வாக்களிப்பாரா போன்ற கேள்விகள் எனது கவனத்திற்கு வந்தன. எந்த அனுமானங்களும் வேண்டாம். அவர் யாத்திரையின் போது, பல்லாரி மாவட்டத்தில் உள்ள சங்கனக்கல்லு என்ற இடத்தில் வாக்களிக்க உள்ளார்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க..பாஜக தலையீடு தவறானது.. பாஜகவை பொளந்து கட்டிய கே.பி முனுசாமி! அதிமுக வட்டாரங்களில் பரபரப்பு

click me!